
Cinema News
படமே வரல…அதுக்குள்ள பஞ்சாயத்தா?.. புஷ்பா படத்தில் சமந்தா பாடலுக்கு எதிர்ப்பு….
தெலுங்கு சினிமா ரசிகர்களால் ஐகான் ஸ்டார் என அழைக்கப்படும் அல்லு அர்ஜூன் நடித்துள்ள திரைப்படம் புஷ்பா. இப்படம் ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்தும் கும்பலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை தெலுங்கில் பல ஹிட் படங்களை இயக்கிய சுகுமார் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஸ்ரீதேவி பிரசாத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளது. முதல் பாகம் வருகிற 17ம் தேதி வெளியாகவுள்ளது. மேலும், நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு அட்டகாசமான பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.
படத்தில் இந்த பாடல் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இப்பாடல் பெரிய ஹைலைட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழில் இப்படம் ‘ஊ சொல்றியா மாமா’ என துவங்கும்படி எழுதப்பட்டுள்ளது. இந்த பாடலில் வரும் வரிகள் ஆண்களை கொச்சைப்படுத்துவதாக ஆந்திரா ஆண்கள் பாதுகாப்பு சங்கம் போர்க்கொடி தூக்கியுள்ளது. இந்த பாடலை தடை செய்ய வேணும். இல்லையெனில் சமந்தா உள்ளிட்ட படக்குழு மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த பாடலை பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ளார். இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள அவர் ‘நான் ஊ சொல்றியா என்றுதன் எழுதினேன். பாடலை கேட்டு ‘ஓ’ சொல்றியா என தவறாக புரிந்து கொண்டார்கள். தமிழ்நாட்டில் இப்பாடலை கொண்டாடுகிறார்கள். ஆந்திராவில் சிலர் விளம்பரத்திற்காக எதிர்க்கிறார்கள்.இந்த இணைய யுகத்தில் விளம்பரத்திற்காக செய்யப்படும் விஷயங்கள் நிறைய உள்ளன. அதில், ஒன்றுதான் இதுவும்” என அவர் கூறியுள்ளார்.