Good Bad Ugly: விக்ரம் படத்துக்கு நேர்ந்த கதி!.. குட் பேட் அக்லிக்கும் FDFS ரிலீஸ் சிக்கல்?.. முதலுக்கே மோசமாகிடுமே!..

by சிவா |   ( Updated:2025-04-08 06:54:08  )
good bad ugly
X

good bad ugly

Good Bad Ugly: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. அஜித் ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரிட்டாக இந்த படம் உருவாகியுள்ளது. ஏனெனில், படம் முழுக்க இது போல ஒரு மாஸ் படத்தில் அஜித் நடித்தது இல்லை. பில்லா, மங்காத்தா படங்கள் அஜித் ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருந்தாலும் அதை விட பல மடங்கு அசத்தலாக குட் பேட் அக்லி உருவாகியுள்ளது.

இதுவரை வெளிவந்த டீசர் மற்றும் டிரெய்லர் வீடியோக்கள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது. இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வருகிற 10ம் தேதி வெளியாகவுள்ளது. எனவே, ஆன்லைன் டிக்கெட் புக்கிங் துவங்கிவிட்டது.

வழக்கமாக தமிழகத்தில் காலை 9 மணி காட்சி வெளியாகும். அதேநேரம், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் காலை 6 மணிக்கு முதல் காட்சி வெளியாகும். 9 மணி வரை கூட காத்திருக்க முடியாத ரசிகர்கள் மற்றும் யுடியூபர்ஸ்கள் எல்லாம் அங்கு சென்று படம் பார்த்துவிடுவார்கள். ஆனால், குட் பேட் அக்லியை பொறுத்தவரை இந்தியா முழுவதும் முதல் காட்சி காலை 9 மணிக்கு என்றே அறிவித்துவிட்டார்கள்.

good bad ugly
good bad ugly

ஒருபக்கம், FDFS என சொல்லப்படும் முதல்நாள் முதல் காட்சியை காண அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். முதல் காட்சிக்கான டிக்கெட்டை வாங்க ஆன்லைன் மூலமாகவும், தியேட்டரில் டிக்கெட் கவுண்டரில் கொடுக்கப்படும் டிக்கெட்டுகளை பெறவும் முயற்சி செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், மதுரையில் உள்ள அஜித் ரசிகர்களுக்கு முதல் நாள் முதல் காட்சியை பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. மல்டிபிளக்ஸ் தியேட்டரில் ஒரு டிக்கெட்டின் விலை 1,900 என இருக்க, தனித்தியேட்டர்களில் முதல் காட்சிக்கான டிக்கெட்டை ரூ.500க்கு விற்க வேண்டும் என வினியோகஸ்தர்கள் சொல்ல தியேட்டர் அதிபர்கள் அதை ஏற்கவில்லை. நாங்களும் 190 விலைக்கே டிக்கெட்டை விற்போம் என சொல்ல அப்படியெனில் முதல் காட்சி வெளியிட வேண்டாம். 12 மணிக்கு காட்சிகளை போடுங்கள் என வினியோகஸ்தர்கள் செக் வைக்க பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது.

வினியோகஸ்தர்கள் சொல்வதை தியேட்டர் அதிபர்கள் ஏற்றுகொண்டால் மதுரையில் 9 மணிக்கு முதல் காட்சியும், இல்லையெனில் 12 மணிக்கே முதல் காட்சி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் ரசிகர்களுக்கு இது ஏமாற்றமாகவே முடியும். விக்ரமின் வீர தீர சூரன் காலை முதல் வெளியாகாமல் மாலை 5 மணிக்கு வெளியானது. இதனால், அந்த படம் பெரிய வசூலை பெறவில்லை. அதே நிலைமை குட் பேட் அக்லிக்கும் ஏற்படுமா தெரியவில்லை. ஆனாலும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு மதுரையில் காலை 9 மணிக்கு முதல் காட்சி வெளியாகும் என்றே பலரும் எதிர்பார்க்கிறார்கள்.

Next Story