ஹேமா கமிட்டினா? சூப்பர்ஸ்டார் கேள்வி.. சண்டைக்கு நின்ற ஜீவா.. தொடர்ந்து சிக்கும் தமிழ் ஹீரோக்கள்…

by Akhilan |   ( Updated:2024-09-02 12:31:37  )
ஹேமா கமிட்டினா? சூப்பர்ஸ்டார் கேள்வி.. சண்டைக்கு நின்ற ஜீவா.. தொடர்ந்து சிக்கும் தமிழ் ஹீரோக்கள்…
X

#image_title

Malluwood: மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு சரியான பாதுகாப்பு இல்லை என்ற ஹேமா கமிட்டியின் அறிக்கை தற்போது சர்ச்சையாகி வருகிறது. இந்நிலையில் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு தமிழ் நடிகர்கள் முறையாக பதில் அளிக்காமல் தட்டிக் கழிக்கும் விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

மலையாள நடிகர் சங்கமான அம்மா குற்றம் சாட்டப்பட்ட நடிகர் திலீப்புக்கு ஆதரவாக இருப்பதாக கூறி நடிகைகளாக இணைந்து மற்றொரு சங்கத்தை உருவாக்கினார். பிரச்சனைக்கு முதல் காரணமாக அமைந்த பாவனா விவாகரத்தில் நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.

இதையும் படிங்க: வேட்டையன் படத்துக்கு 7500 திரையரங்குகள்… ஆடியோ லாஞ்ச்… ரஜினி சொன்ன தகவல்

அந்த கமிட்டியின் அறிக்கை பல வருடங்களாக கிடப்பில் இருக்கிறது. இது குறித்த நடிகை பார்வதி ஏன் அதை வெளியிடவில்லை. உங்கள் அரசியல் லாபத்திற்கு பயன்படுத்திக் கொள்ள எண்ணுகிறீர்களா என கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து அந்த அறிக்கையின் சில தகவல்கள் இணையத்தில் கசிந்தது.

இதைத்தொடர்ந்து மோகன்லால் உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர். இதைத்தொடர்ந்து பிரச்சினை பரப்பரப்பை ஏற்படுத்தியது. இந்த பிரச்சினையில் நடிகர் மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட மூத்த நடிகர்களின் பெயர்கள் அடிபட்டு வந்தது.

சூப்பர் ஸ்டாராக வலம் வரும் மோகன்லால் மேடையிலேயே பேச முடியாமல் திணறி ஒரு கட்டத்தில் என்னை உங்களுக்கு தெரியாதா என்னும் அளவுக்கு கீழே இறங்கி வந்தார். இப்படி மலையாள நடிகர்கள் அனைவரும் தற்போது திணறி வருகின்றனர்.

இதையும் படிங்க: மலையாள கதையே ஓயலை… தெலுங்கு சினிமா பக்கம் பிரச்னை பத்திக்கொண்டதாம்.. பதற்றத்தில் பிரபல ஹீரோக்கள்

இதைத்தொடர்ந்து எல்லா பிரபலங்களிடமும் இதே கேள்வியை நிருபர்கள் முன்வைக்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து கேள்வி எழுப்ப அவரோ அப்படின்னா என்ன என்னும் ரீதியில் பதில் அளித்து விட்டார்.

நடிகர் ஜீவாவிடம் இதே கேள்வியை கேட்க அவரோ சில நிமிடங்கள் சமாளிக்க முடியாமல் செய்தியாளர்களிடம் சண்டைக்கு செல்லும் நிலை உருவானது. இதனால் தொடர்ந்து பிரபலங்கள் இதற்கு பதில் சொல்வார்களா இல்லை சர்ச்சையில் சீக்குவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Next Story