நயனை கெஞ்ச வச்ச பாவம்… லைகாவிடம் கெஞ்சுகிறாரா அஜித்… விடாமுயற்சி சர்ச்சை!

by Akhilan |
நயனை கெஞ்ச வச்ச பாவம்… லைகாவிடம் கெஞ்சுகிறாரா அஜித்… விடாமுயற்சி சர்ச்சை!
X

அஜித்குமார் நடிப்பில் உருவாக இருக்கும் விடாமுயற்சி படத்தினை தயாரிப்பு நிறுவனமான லைகா கைவிட இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் பலரும் இதுகுறித்து தற்போது விமர்சித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

துணிவு படத்தினை முடித்துவிட்டு அஜித்தின் அடுத்த படத்தினை யார் இயக்க போகிறார் என்ற கேள்விகள் பலரிடம் அதிகமாக எழுந்தது. இதில் அதிகாரப்பூர்வமாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் எனத் தகவல்கள் வெளியானது. அதற்கேற்ப, விக்னேஷ் சிவனும் தன்னுடைய ட்விட்டரில் இதை பகிரங்கமாக வெளியிட்டார். ஆனால் அவர் சொன்ன கதையில் அஜித்திற்கு திருப்தி இல்லாமல் போகவே அவரை அப்படத்தில் இருந்து நீக்கி விட தயாரிப்பு தரப்புக்கு அஜித்தே கோரிக்கை வைத்து இருக்கிறார்.

இதையும் படிங்க: சரத்குமாருக்கும், கே.எஸ்.ரவிக்குமாருக்கும் வெடித்த மிகப்பெரிய சண்டை… அதுக்கு காரணம் இது தான்… இதெல்லாம் ஓவருல!

மேலும் அந்த படத்தில் நடிகை நயன்தாரா ஜோடியாகவும், பல வருடம் கழித்து காமெடிக்கு சந்தானத்தினை ஒரு கோடி ரூபாய் கொடுத்து புக் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் கோலிவுட்டில் கிசுகிசுத்தன. ஆனால் விக்னேஷ் கதையில் திருப்தி இல்லை என அஜித் அவரை நீக்க முடிவெடுத்தார். நயனே இறங்கி போய் அஜித்திடம் கோரிக்கை வைத்து இருக்கிறார்.

ஆனால் அஜித் அவரின் முடிவில் உறுதியாக இருந்து பின்னர் லைகா நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமாக விடாமுயற்சி திரைப்படத்தினை மகிழ்திருவேணி இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் டிஸ்கஷன் சென்னையில் ஒரு பிரபல ஹோட்டலில் தொடர்ந்து நடந்து வந்தது. ஆனால் படத்தின் அடுத்தக்கட்டம் நகரவே இல்லை. அஜித்தும் அதைப்பற்றிய கவலையே இல்லாமல் பைக் சுற்றி வருகின்றார். இதனால் தயாரிப்பு நிறுவனம் கடுப்பில் இருப்பதாக தெரிகிறது.

இதனால் விடாமுயற்சியை கைவிட்டு, வேறு படத்தினை இயக்கலாம் என்ற முடிவில் தயாரிப்பு நிர்வாகம் இருப்பதாகவும் இன்னும் ஒரு மாதத்தில் படத்தினை தொடங்காவிட்டால் கண்டிப்பாக இந்த அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விக்னேஷ் கேரியரில் விழுந்த ப்ரேக் மாதிரி மகிழ் திருமேனி கேரியரிலும் வரும் என்கிறார்கள்.

இதையும் படிங்க: ரஜினிக்கு இணையான ஆளுனா அது இவங்கதான்! போற போக்குல அடுத்த சர்ச்சையை கிளப்பிய சரத்குமார்

Next Story