ஜேசன் சஞ்சய் படத்துக்கு சூனியம் வச்சிராதீங்கப்பு… வெளியாகும் அப்டேட்களால் கடுப்பாகும் விஜய் ரசிகர்கள்…

Published on: March 17, 2024
---Advertisement---

Jason Sanjay: விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்க இருக்கும் படத்தின் அப்டேட்கள் தொடர்ச்சியாக கசிந்து வரும் நிலையில் அதை பார்த்த விஜய் ரசிகர்கள் கொஞ்சம் கடுப்பில் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

கடந்த வருடம் லைகா புரோடக்‌ஷன் தயாரிப்பில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் ஒரு படத்தினை இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அப்பா ஹீரோவாக இருந்த நிலையில் தாத்தா போல டைரக்‌ஷனை சஞ்சய் தேர்வு செய்து இருந்தார். அதுவே பலரிடத்திலும் ஆச்சரியமான விஷயமாக பார்க்கப்பட்டது. ஆனால் தாத்தா எஸ்.ஏ.சி மற்றும் அப்பா விஜய் இருவருமே ஒப்பந்தம் கையெழுத்தான போது உடன் இல்லை.

இதையும் படிங்க: லைக்கா மீது அஜித்துக்கு கோவமா? ‘ஏகே 63’ பட போஸ்டர் வெளியிட்டதன் பின்னனி காரணம் இதுதானா?

இதன்பின் பல யூகம் பிறந்தது. விஜயின் மனைவி சங்கீதாவின் தந்தை லண்டனில் மிகப்பெரிய கோடீஸ்வரர். அவர் லைகா சுபாஸ்கரனுக்கு நெருக்கம் என்பதால் அவர் கொடுக்கும் தொகையை வைத்தே பேரனின் படத்தினை தயாரிக்க கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படுகிறது. கதை டிஸ்கஷன் வேலைகள் தொடர்ச்சியாக நடந்து வந்தது.

இப்படத்தின் ஹீரோவாக பல முன்னணி நடிகர்கள் பேச்சுவார்த்தையில் இருந்தனர். கவின், விஜய் சேதுபதி, துல்கர் சல்மான் என லிஸ்ட் நீண்டது. தற்போது துருவ் விக்ரமின் ஐந்தாவது படமாக தான் இப்படம் உருவாக இருக்கிறதாம். நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கலாம் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஒரு ரூபாய்க்கு செக் கொடுத்த கமல்!.. ஆடிப்போன தயாரிப்பாளர்!.. ஆளவந்தானில் நடந்த அக்கப்போறு..

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.