பிளாப் கொடுத்த பின்பும் வாய்ப்பு... மீண்டும் படம் இயக்கும் ரஜினி மகள்.....

by சிவா |
iswarya danush
X

ரஜினியின் இளைய மகள் ஐஸ்வர்யா. நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷின் அண்ணன் செல்வராகவனிடம் சில படங்கள் உதவியாளராக பணிபுரிந்தார்.

அதன்பின் தனது கணவர் தனுஷ் நடிக்க 3 படத்தை இயக்கினார். தனுஷ் - அனிருத் கூட்டணியில் உருவாகி உலகமெங்கும் ஹிட் அடித்த ‘ஒய் திஸ் கொலை வெரி’ பாடல் இப்படத்தில்தான் இடம் பெற்றது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடத்திருந்தார். இப்படம் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: ரம்பாவுக்கு கூட இப்படி இருந்திருக்காது? சைசான லெக் பீஸ் செம கிக்கு ஏத்துது!

சில வருடங்கள் கழித்து கௌதம் கார்த்தியை வைத்து ஐஸ்வர்யா இயக்கிய படம் ‘வை ராஜா வை’. இப்படம் சூதாட்டத்தை மையமாக கொண்டது. இப்படத்தில் தனுஷ் ஒரு சிறப்பு வேடத்திலும் நடித்துக்கொடுத்தார்.

பிரியா ஆனந்த், விவேக், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் 2015ம் ஆண்டு வெளியானது. ஆனால், ரசிகர்களை கவராததால் தோல்வியை சந்தித்தது.

அதன்பின் கடந்த 6 வருடங்களாக ஐஸ்வர்யா இயக்கத்தில் கவனம் செலுத்தவில்லை. தற்போது மீண்டும் அவருக்கு அந்த ஆசை வந்துள்ளது. லைக்கா தயாரிக்கும் புதிய படத்தை அவர் இயக்கவுள்ளார். இப்படத்திற்கான கதையை சஞ்சீவ் என்பவர் இயக்கியுள்ளார். இந்த தகவலை லைக்கா நிறுவனமே தங்களின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இது ஒரு திரில்லர் கதை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் நடிக்கும் நடிகை, நடிகையர் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story