சின்ன பொண்ணுங்க தான் வேணும்!.. அடம்பிடிக்கும் 70 வயது நடிகர்.. அப்போ ரம்யா பாண்டியன்.. இப்போ யாரு தெரியுமா?

by Saranya M |
சின்ன பொண்ணுங்க தான் வேணும்!.. அடம்பிடிக்கும் 70 வயது நடிகர்.. அப்போ ரம்யா பாண்டியன்.. இப்போ யாரு தெரியுமா?
X

வயதான நடிகர்களே ஆனாலும் சீனியர் நடிகைகளுடன் நடிக்க மாட்டோம் என்கிற வைராக்கியத்துடன் சில நடிகர்கள் சுற்றி வரக் காரணமே அவர்களுக்கு இந்த வயதிலும் இருக்கும் மார்க்கெட் தான்.

70 வயதை கடந்த மெகா ஸ்டார் மம்மூட்டி கடைசியாக நடிகை ரம்யா பாண்டியன் உடன் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில், அந்த படம் கேரள அரசின் விருதுகளை அள்ளிக் குவித்து இருந்தது.

இந்நிலையில், அடுத்ததாக அவருக்கு ஜோடியாக இன்னொரு இளம் நடிகை இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

மகனை விட முரட்டு வேகம்:

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்மூட்டி இந்த வயதிலும் ஏகப்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். 71 வயதாகும் நடிகர் மம்மூட்டி வருஷத்துக்கு 4 முதல் 5 படங்களை ரிலீஸ் செய்து வருகிறார். அவரது மகன் துல்கர் சல்மானே வருஷத்துக்கு ஒரு படம் தான் ரிலீஸ் செய்து வருகிறார்.

செம ஸ்பீடில் நடித்துத் தள்ளும் மம்மூட்டி நல்ல கதைகளையும் தேர்வு செய்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி விருதுகளையும் குவித்து வருகிறார்.

ரம்யா பாண்டியன் ஜோடி:

மலையாளத்திலும் சரி, தமிழிலும் சரி மம்மூட்டி நடித்து வரும் படங்களில் இளம் நடிகைகளே அவருக்கு ஜோடியாக தொடர்ந்து நடித்து வருகின்றனர். லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக பிக் பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியன் நடித்திருந்தார்.

அந்த படத்துக்கு கேரள அரசின் விருதுகள் பல சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. ரம்யா பாண்டியன் மட்டுமின்றி பல இளம் நடிகைகளுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார் மம்மூட்டி.

ஜோதிகாவுடன் காதல்:

நடிகை ரம்யா பாண்டியன் உடன் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் நடித்து முடித்த மம்மூட்டி அடுத்ததாக ஜோதிகாவுடன் காதல் படத்தில் நடித்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் அந்த படத்தின் ஷூட்டிங்கை பார்க்க வந்த சூர்யாவுக்கு தனது கைகளாலே பிரியாணி சமைத்து போட்டிருந்தார் மம்மூட்டி.

படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் காதல் படம் வெளியாகும் என தெரிகிறது.

அடுத்து ஐஸ்வர்யா மேனன் உடன்:

இந்நிலையில், மம்மூட்டியின் அடுத்த படத்தில் தமிழ்ப்படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த இளம் நடிகை ஐஸ்வர்யா மேனன் இணைந்து நடிக்கப் போவதாக அவரே மம்மூட்டியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

71 வயதிலும் மனுஷன் இளம் நடிகைகளுடன் ஜோடி போட்டு என்னம்மா நடிக்கிறாரு என்றும் ஐஸ்வர்யா மேனனுக்கு இப்படியொரு லெஜண்ட் உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது சூப்பரான விஷயம் என கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

Next Story