ரம்யா பாண்டியனை தொடர்ந்து 73 வயது நடிகருடன் நடித்த ஐஸ்வர்யா மேனன்!.. என்ன சொன்னாரு பாருங்க!

by Saranya M |   ( Updated:2025-04-10 09:23:42  )
ரம்யா பாண்டியனை தொடர்ந்து 73 வயது நடிகருடன் நடித்த ஐஸ்வர்யா மேனன்!.. என்ன சொன்னாரு பாருங்க!
X

நடிகை ஐஸ்வர்யா மேனன் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் தொடர்ந்து அவருடைய கவர்ச்சி புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். மேலும், தற்போது அவர் மலையாளத்தில் முன்னணி நடிகரான மம்முட்டியுடன் பஸூக்கா படப்பிடிப்பின் போது எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழில் காதலில் சொதப்புவது எப்படி படம் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு, தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், ஐஸ்வர்யா மேனன் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். 2022ம் ஆண்டு சோனி லைவில் வெளியான தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப்சீரிஸிலும் நடித்துள்ளார்.

யூடுலி பிலிம்ஸ் சரிகம தயாரிப்பில் டீனோ டென்னிஸ் இயக்கத்தில் அதிரடி திரில்லர் மலையாள படமாக பஸூக்கா இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் மம்முட்டி, கவுதம் வாசுதேவ் மேனன், காயத்திரி ஐயர், பாபு ஆண்டனி, ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சயீத் அப்பாஸ் இசையமைத்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா மேனன் சமூக வலைதளத்தில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நிலையில், தொடர்ந்து தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார். இந்நிலையில், இன்று பஸூக்கா படத்தின் வெளியீட்டை முன்னிட்டு தான் மம்முட்டியுடன் படப்பிடிப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

ஐஸ்வர்யா மேனன் புகைப்படங்களுடன் பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில், பஸூக்கா படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நம்ப முடியாத அளவிற்கு வரவேற்பு பெற்றிருப்பதை அறிந்ததும் என் இதயம் நிறைந்துள்ளது. இந்திய சினிமாவின் பெருமைக்குரிய நபரான மம்முட்டி அவர்களுடன் இணைந்து பணிபுரியும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அந்த அற்புதமான கதாப்பாத்திரத்தை எனக்கு வழங்கிய டீனோ டென்னிஸ் அவர்களுக்கு மிக்க நன்றி. பஸூக்கா படம் பிளாக்பஸ்டர் என்பதை அறிந்ததும் என்னால் உற்சாகத்தை அடக்க முடியவில்லை. மேலும், தயவு செய்து உங்கள் அருகில் இருக்கும் திரையரங்குகளில் சென்று படத்தை பாருங்கள் எனக் கூறியுள்ளார்.முன்னதாக மம்முட்டியுடன் இணைந்து இளம் நடிகை ரம்யா பாண்டியன் நண்பகல் நேரத்து மயக்கம் எனும் படத்தில் நடித்து இருந்தார். அவரை தொடர்ந்து ஐஸ்வர்யா மேனனுக்கும் மம்முட்டியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Next Story