Cinema News
விக்ரமின் கடைசி ஹிட் படம் எதுன்னு தெரியுமா?.. இத்தனை வருடம் ஆகிவிட்டதா?..
சினிமா உலகில் ஒரு அர்ப்பணிப்பு உள்ள நடிகர் என்றால் கண்டிப்பாக அந்த லிஸ்ட்டில் நடிகர் விக்ரம் பெயர் இல்லாமல் இருக்காது. கமல், சிவாஜிக்கு அடுத்தப்படியாக நடிப்பிற்காக தன்னையே வருத்திக் கொள்ள கொஞ்சம் கூட விக்ரம் தயங்கியதே இல்லை. இதை பற்றி ஒரு சமயம் ரஜினிகூட ஒரு மேடையில் கூறினார்.
ஹாலிவுட் ஹீரோக்கள் கூட இந்த அளவுக்கு மெனக்கிட மாட்டார்கள், ஆனால் விக்ரம் சினிமாவிற்காக இப்படி உழைப்பதை பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது என்று ரஜினி கூறியிருந்தார். அதே போல் கமலும் ஒரு விழா மேடையில் மீரா படத்தின் போதே இவர் ஒரு பெரிய அந்தஸ்தை அடைய போகிறார் என்று கணித்தேன் என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க : பயில்வான் கேட்ட கேள்வி!.. மனதில் வைத்து பல வருடங்கள் கழித்து பழிவாங்கிய கமல்ஹாசன்!…
இந்த அளவுக்கு அசாத்தியமான ஒரு நடிகர் சமீபகாலமாக தொடர்ந்து ப்ளாப் படங்களையே கொடுப்பது சற்று வருத்தத்திற்கு உரியதாக இருக்கிறது. கிட்டத்தட்ட விக்ரம் சோலோவாக நடித்து ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்து 17 வருடங்கள் ஆகிவிட்டது. அந்நியன் படம் தான் அவர் நடித்து பெரிய ஹிட் கொடுத்த படமாக இருந்தது.
அதன் பின் வெளியான படங்கள் எல்லாமே தோல்வியையே சந்தித்தன. எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பதிவு செய்யவில்லை. கடைசியாக வெளிவந்த பொன்னியின் செல்வன் படம் கூட மல்டி ஸ்டார் படமாகவே அவருக்கு அமைந்தது. இப்படி தொடர்ந்து ப்ளாப் கொடுக்கும் விக்ரம் எந்த இடத்தில் தடுமாறுகிறார் என்று ஒரு அலசல் பார்வையே பார்க்கலாம்.
முதலில் அவர் தடுமாறுவது கதையில் தான். ரசிகர்களுக்கு ஏற்றவாறு கதையை தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து சரிவையே சந்தித்து வருகிறார் விக்ரம். கதையில் கவனம் செலுத்தாமல் தனக்கு உண்டான ஸ்பேஸ் படத்தில் நிறைய இருக்கிறதா என்று தான் பார்க்கிறார் போல விக்ரம்.
படம் முழுக்க வரவேண்டும் என நினைக்கும் விக்ரம் படத்தின் கதையை தேர்ந்தெடுப்பதில் கோட்டை விடுகிறார். அதே போல் படத்தின் எல்லா கதாபாத்திரமும் தானே நடிக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவதாகவே தெரிகிறது. அதனாலேயே பல வேடங்களில் நடித்து ரசிகர்களின் முகச்சுழிப்பிற்கும் ஆளாகிறார். கதையில் ஹீரோவுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவுக்கு முக்கியத்துவம் வில்லன் ரோலுக்கும் கொடுக்கப்பட வேண்டும்.
இதையும் படிங்க : நந்தா படத்தில் சிவாஜியை நடிக்கவிடாமல் தடுத்த பிரபு… இவ்வளவு நடந்திருக்கா?!…
ஆனால் சில சமயங்களில் விக்ரம் அந்த இரண்டையும் அவரே ஏற்று நடிப்பதால் இரண்டிற்கு வித்தியாசம் தெரியாமல் போய் விடுகிறது. இப்படி ஏகப்பட்ட தவறுகளை செய்து வருவதாலேயே அவரால் சோலோவாக நின்னு ஜெயிக்க முடியாமல் போகிறது. இனிமேல் வரும் ‘தங்கலான்’ படமாவது ரசிகர்களின் மனதை பூர்த்தி செய்யுமா என்று பார்க்கலாம்.