தமிழ் சினிமா உலகில் நடிகர் சூர்யா அயர்ன் படத்திற்குப் பிறகு பிரபலமானார். சிங்கம், சிங்கம்2, சிங்கம் 3 மற்றும் 24 என கலவையா நிறைய படங்கள் கொடுத்தார். சமீபத்தில் அவர் எடுத்த முடிவுகள் எல்லாமே தவறா போயிடுச்சான்னு பார்க்க வேண்டியிருக்கு. ஒரு பக்கம் புறநானூறு டிராப். வாடிவாசல் டவுட்ல இருக்கு.
அடுத்து இந்தி பக்கம் போறாரு. அங்கு 600 கோடி பட்ஜெட்ல கர்ணா படம் டிராப். சூர்யா மிகப்பெரிய அப்செட்ல இருக்காரு. திரும்பவும் சென்னை வரப்போறாருன்னு சொல்றாங்க. இதுபற்றி வலைப்பேச்சு அந்தனன் என்ன சொல்கிறார்னு பார்க்கலாம்.
இதையும் படிங்க… அஜித் செட்டே ஆகல!.. பிடிக்கவே இல்லை!. சுனாமி வந்து தூக்கட்டும்னு நினைச்சேன்.. புலம்பும் இயக்குனர்!
‘கர்ணா’ டிராப் ஆயிடுச்சு. அது ஒருவேளை மறுபடியும் பேசி மாறி வராங்களான்னு தெரியாது. இன்னொரு பக்கம் டைரக்டர் சுதா கொங்கரன் கூட மீட்டிங் நடப்பதா சொல்றாங்க. அது புறநானூறு கிடையாது. அது வேண்டாம்கற இடத்துக்கு வந்துட்டாரு. ஒருவேளை வேற கதைகள் ஏதும் பண்றாங்களான்னு தெரியல. ‘வாடிவாசல்’ மறுபடியும் ஸ்டார்ட் பண்றாங்க. அக்டோபர்ல இருந்து சூட்டிங் தொடங்குறாங்க. அதுல அமீர், சூர்யா இரண்டு பேரும் இருக்காங்க. வணங்கான், புறநானூறு இல்லை.
இப்போ ‘வணங்கான்’ மிகப்பெரிய ஹிட்டாகி பாலா பழைய இடத்துக்கே வந்துட்டாருன்னா சூர்யா மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்றலாம். அதுல தப்பு இல்ல. அதற்கான வாய்ப்புகளும் அமையக்கூடும். அது மாதிரி தான் சுதா கொங்கரனும். ‘புறநானூறு’ தொடர்பான கதையோடு முரண்பாடு இருந்தாலும், நாளைக்கு வேறொரு கதையோடு வந்தால் சூர்யா வேணாம்னு சொல்லப்போறது இல்ல.
இதையும் படிங்க… என்னடா இங்க நடக்குது? ஒண்ணுமே புரிய மாட்டேங்குது!. கல்கி படத்துக்கு இதுதான் கதையா?
அதுக்கான பேச்சுவார்த்தைகள் நடந்துக்கிட்டு இருக்குன்னு சொல்றாங்க. இப்போ எடுக்குற முடிவுகள் எல்லா நேரத்துலயும் சரியா இருக்காது. தவறா போறதுக்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கு. சூர்யாவுக்கும் அப்படித் தான் அமைஞ்சிருக்கு. சினிமாவைப் பொருத்தவரைக்கும் முழு ஈடுபாட்டோடு அந்தப் படத்துல நடிக்க வந்தால் தான் அந்தக் கேரக்டர் நல்லா வரும்.
சும்மா அரைகுறை மனதோடு நடிக்க ஒப்புக்கொண்டால் அந்தப் படம் விளங்காது. அதனால சூர்யா பிடிக்காத படத்துல இருந்து விலகுவதே நல்லது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…