Simran: டப்பா ரோல் நடிக்கிறத விட ஆண்ட்டியா நடிக்கிறது மேல்… அந்த நடிகையை மேடையில் பொளந்த சிம்ரன்…

Simran: தமிழ் சினிமாவின் இடையழகி சிம்ரன் நடிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் நிலையில் அவர் மேடையில் முதல்முறையாக கோபமாக பேசி இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
கோலிவுட்டில் நடிகைகள் ஆதிக்கம் சில காலம் தான். ஒரு குறிப்பிட்ட வருடம் ஹிட் மார்க்கெட்டில் இருக்கும் நடிகைகள் அவர்கள் கல்யாணம் முடிந்துவிட்டால் மொத்தமாக நடிகைகள் அந்தஸ்த்தை இழந்து விடுகிறார்கள். அவர்களை உடனே அக்கா, அம்மா ரோலுக்கு அழைக்கின்றனர்.
காலம் காலமாக கோலிவுட் சினிமாவில் இப்படிதான் நடந்து வருகிறது. அப்படி தமிழ் சினிமாவில் இடையழகி சிம்ரன் ஹிட் படங்களை கொடுத்து வந்த சமயம் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். திடீரென அவருக்கு தன்னுடைய காதலருடன் திருமணம் முடிந்தது. சினிமாவை விட்டு கொஞ்ச நாள் விலகி இருந்தார்.
தற்போது சின்ன சின்ன கதாபாத்திரங்களை ஏற்றி நடித்து வருகிறார். ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் ஒரு குட்டி ரோலில் நடித்தார். அடுத்து குட் பேட் அக்லி படத்திலும் சின்ன வேடத்தில் நடித்து ஆச்சரியப்படுத்தினார். இது பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
Avungala tha solluranga pola😂#Simran #Trending pic.twitter.com/ksw67Xjhty
— Cine Bytes (@bytescinema) April 20, 2025
இந்நிலையில் நடிகை சிம்ரன் ஒரு விருதுவிழாவில் பேசி இருப்பது ஆச்சரியத்தை உருவாக்கி பரபரப்பை தொற்ற வைத்துள்ளது. அவர் பேசும் போது, என்னுடைய சகநடிகையிடம் மெசேஜ் செய்து இருந்தேன். உங்களை அந்த ரோலில் பார்ப்பது அதிர்ச்சியாக இருந்தது என்று.
அவர் உடனே எனக்கு ரிப்ளே செய்தார். ஆண்ட்டி ரோலில் நடிப்பதற்கு இது மேல். அது எனக்கு வித்தியாசமாக தோன்றியது. ஆண்ட்டி ரோல், அம்மா ரோலில் நடிப்பதை விட டப்பா ரோலில் நடிப்பது தான் மோசம் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார் சிம்ரன்.
தற்போது சிம்ரன் பேசி இருக்கும் இந்த நடிகை குறித்து ரசிகர்கள் யாராக இருக்கும் என கிசுகிசுத்து வருகின்றனர். ஒருசிலர் சிம்ரன் நடிக்கும் போது மார்க்கெட்டில் இருந்த ஜோதிகா தான் தற்போது தொடர்ந்து நடித்து வருகிறார். ஒருவேளை அவரைதான் சொல்லுகிறாரோ எனவும் கேள்வி எழுந்துள்ளது.