தண்ணில்லாம் வத்துன பிறகு boat-அ கொண்டு போய் என்ன செய்ய? சாப்பாடு போட்ட விஜய் இத செஞ்சாரா?

Published on: December 8, 2023
vijay
---Advertisement---

Actor Vijay: கோலிவுட்டின் வசூல் சக்கரவர்த்தி நடிகர் விஜய். இவர் கடைசியாக நடித்து வெளியான படம் லியோ. லியோ திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும் சில பிரச்சினைகளை சந்தித்தது.

அந்தப் படத்திற்கு பிறகு தற்போது விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி மற்றும் சினேகா போன்றோர் நடிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் பல முக்கிய நடிகர்களும் நடிக்க இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: பைக் ஓட்ட போயிட்டா சினிமா எப்படி எடுக்க!.. அறிவுரை சொன்னவருக்கு அஜித் கொடுத்த பதில் இதுதான்!…

என்னதான் சினிமாவில் ஒரு உச்சம் தொட்ட நடிகராக இருந்தாலும் அடுத்து அரசியலிலும் காலடி பதிக்க காத்திருக்கிறார் விஜய். அவ்வப்போது தனது மக்கள் இயக்கம் சார்பாக கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகள், மக்களுக்கு தேவையான உதவிகள் என பலவற்றை செய்து வருகிறார் விஜய்.

இந்த நிலையில் சமீபத்தில் சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாங் புயல் காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளம் சூழ்ந்த இடத்தில் அத்தியாவசிய பொருள்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை சமூக ஆர்வலர்களும் பல பிரபலங்களும் செய்து வந்தனர்.

இதையும் படிங்க:அறிமுகமாகி தொடர் மூன்று ப்ளாக் பஸ்டர் படங்களை கொடுத்த ஒரே ஹீரோ! அட இவரா?

வெள்ள நிவாரண நிதியாக நடிகர்கள் ஒரு சில பேர் கணிசமான தொகையை கொடுத்தனர். இதில் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை வைத்து சாப்பாடு பரிமாறிய புகைப்படங்களும் வெளியானது. இதைப் பற்றி ஒரு பத்திரிக்கையாளர் ‘தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை களத்தில் இறங்கி வேலை செய்யுங்கள்’ என விஜய் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

அது எப்போது? எல்லா இடங்களிலும் தண்ணீர் வற்றிய பிறகு களத்தில் இறங்க சொல்லுவது நியாயமா? உண்மையாக மக்கள் மீது அக்கறை கொண்டவராக இருந்திருந்தால் தனக்கு சொந்தமான மூன்று திருமண மண்டபங்களை திறந்து அல்லவா விட்டிருக்க வேண்டும்?

இதையும் படிங்க: தமிழ் டைரக்டருக்கு நோ.. மலையாள டைரக்டரை லாக் செய்த யாஷ்.. படம் பேரு என்ன தெரியுமா?

எத்தனை பேர் தங்க இடம் இல்லாமல் தவித்தனர். அவர்களை இங்கே வரவழைத்து அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கலாமே? செய்தாரா விஜய் ? என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.