தமிழ் சினிமாவில் உள்ள இசையமைப்பாளர்களில் மிகவும் முக்கியமான ஒரு இசையமைப்பாளர் இளையராஜா. 1967 ஆம் ஆண்டு இளையராஜா முதன் முதலாக இசையமைத்து வெளியான திரைப்படம் அன்னக்கிளி. அன்னக்கிளி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வரிசையாக வாய்ப்புகளை பெற துவங்கினார் இளையராஜா.
அதற்கு பிறகு இளையராஜா இசைக்கு என தனி வரவேற்பு கிடைக்க துவங்கியது. அவரது பாடல்களுக்காகவே மக்கள் திரையரங்குகளுக்கு வர துவங்கினார். இதனால் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அனைவரும் இளையராஜாவை தேடி செல்ல துவங்கினார்.
அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் இளையராஜா அடைந்த உச்சம் அனைவரும் அறிந்ததே. இளையராஜா சினிமாவில் வளர்ந்து வந்த காலக்கட்டத்தில் அவர் கூட இருந்தவர் அவரது தம்பி கங்கை அமரன். கங்கை அமரன் பாடல் வரி எழுதுவது, இசையமைப்பது, படத்தை இயக்குவது என பன்முக திறமை கொண்டவர் கங்கை அமரன்.
வாய்ப்பை கெடுத்த இளையராஜா:
ஆனால் சினிமாவிற்கு வந்த காலக்கட்டத்தில் அவர் பாடல்களுக்கு வரிகளை மட்டுமே எழுதி வந்தார். அப்போது இளையராஜா மிகவும் பிஸியாக இருந்து வந்ததால் அவர் இசையமைப்பதாக கூறிய பல பாடல்களுக்கு கங்கை அமரன் இசையமைத்து கொடுத்துள்ளார். இந்த நிலையில் மலேசியா வாசுதேவன் கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு இசையமைக்க அவர் ஆள்தேடி கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் அவர் கங்கை அமரனுடன் நல்ல பழக்கவழக்கத்தில் இருந்ததால் கங்கை அமரனை இசையமைக்க அழைத்தார். ஆனால் அதற்கு இளையராஜா ஒப்புக்கொள்ளவில்லை. உனக்கு இசையை பற்றி என்ன தெரியும். போய் வேலையை பாரு என கூறியுள்ளார். அதன் பிறகு பலரும் இளையராஜாவிடம் கேட்டுக்கொண்டதை அடுத்து கங்கை அமரன் இசையமைக்க ஒப்புக்கொண்டார் இளையரா.
இந்த நிகழ்வை கங்கை அமரனே ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ்…
Surya: நடிகர்…
சொர்க்கவாசல் படத்தின்…
Lokesh kanagaraj:…
தனுஷ் தயாரிச்ச…