பட விழாவில் கலந்து கொள்ளாததற்கு காரணமே இது தான்!.. வாய் திறந்த நயன்தாரா...
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருவபர் நடிகை நயன்தாரா. அவரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள கனெக்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் சத்யராஜ், வினய் உட்பட பலரும் நடித்திருக்கின்றனர்.
மாயா, கேம் ஓவர் போன்ற திரில்லர் பட வரிசையில் இப்போது கனெக்ட் படமும் அமைந்திருக்கிறது. ஆனால் இந்த படம் ஒரு புதுமையான அனுபத்தை கொடுப்பதாக ரசிகர்கள் அனைவரும் கூறிவருகின்றனர். இந்த படத்தை விக்னேஷ் சிவன் தான் தயாரித்துள்ளார்.
இரட்டை குழந்தை விவகாரத்திற்கு பிறகு நயனை இந்த படத்தின் புரோமோஷன்களில் தான் பார்க்க முடிந்தது. ஒரு சில இடங்களுக்கு புரோமோஷனில் கலந்து கொண்டு பேசிய நயனிடம் நிரூபர்கள் பல கேள்விகளை கேட்டு பதிலை வாங்கினர்.
அந்த வகையில் எந்த படத்திற்குமான இசை வெளியீட்டு விழாவில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த நயன் இசை வெளியீட்டு விழாவிற்கு போனாலே ஒரு ஓரமாக உட்கார வைச்சுராங்க, முக்கியமான இடத்தில் மட்டும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இதையும் படிங்க : என் தங்கை திருமணத்திற்கு பணம் இல்லை!. விஜயகாந்த் என்ன செய்தார் தெரியுமா?!.. உருகிய பொன்னம்பலம்…
அதனாலேயே நான் நினைத்தேன், நாமும் ஒரு பெரிய இடத்திற்கு வரவேண்டும், நமக்கு கொடுக்க வேண்டிய மரியாதை கிடைக்கவேண்டும் என்பதற்காகவே அதுவரை நான் எங்கேயும் கலந்து கொள்வதில்லை. ஆனால் அதன் பிறகு ஒரு இடத்திற்கு வந்த பிறகு கலந்து கொள்ளவில்லை. அது வேற விஷயம் என்று பதில் கூறினார். மேலும் அவர் கூறும்போது ஆணும் பெண்ணும் சமம். ஹீரோவை வைத்து பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கிறார்கள்.
ஏன் ஹீரோயினை வைத்து மட்டும் எடுக்க மாட்டிக்கிறார்கள்? இந்த நிலைமை மாற வேண்டும். எனக்குள் அந்த மாதிரி ஐடியா இருக்கிறது. கண்டிப்பாக செய்வேன் என்றும் கூறினார்.