
Cinema News
எவ்ளோ சொல்லியும் அரவிந்த்சாமி கேட்கல.. மனோபாலா மரணத்திற்கு இதுதான் காரணம்?.. தயாரிப்பாளர் பகீர் வாக்குமூலம்…
தமிழ் சினிமாவில் பிரபலங்களுக்கிடையேயும் சரி ரசிகர்களுக்கு இடையேயும் சரி ஒரு நல்ல வரவேற்பை பெற்ற நடிகராக இயக்குனராக வலம் வந்தவர் மனோபாலா. இப்போது அவரை நினைத்து திரை உலகமே சோகத்தில் ஆழ்த்திருக்கின்றது. அவருடைய மறைவு தாங்க முடியாத இழப்பாக அமைந்து விட்டது.

mano1
இந்த நிலையில் அவரைப் பற்றிய நினைவலைகளை அவ்வப்போது பிரபலங்கள் பேட்டிகளில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் அவருக்கு நெருக்கமானவரும் சினிமா தயாரிப்பாளர் டி.சிவா மனோ பாலாவை பற்றிய தன்னுடைய அனுபவத்தை ஒரு பேட்டியின் மூலம் பகிர்ந்து இருக்கிறார்.
அதாவது மனோபாலா எப்பொழுதும் தன் உடம்பின் மீது அக்கறை இல்லாதவராகவே இருந்திருக்கிறார். மனோபாலா ஆஞ்சியோ செய்த போதும் ஒரு மாதத்திற்குள் தனக்கு நன்றாகிவிட்டது, சரி நம்ம வேலையை பார்ப்போம் என்று படப்பிடிப்பிற்கு வந்து விட்டாராம். அதுவும் போக அவர் தினமும் தயிர் ஊற்றி மட்டும்தான் சாப்பிடுவாராம். வேற எதையும் சாப்பிட மாட்டாராம். அதனாலேயே அவருக்கு விட்டமின் மிகவும் குறைவாக இருக்கிறது எனவும் எதிர்ப்பு சக்தியும் மிகவும் குறைவாக இருக்கிறது எனவும் மருத்துவர்கள் சொல்லி இருந்தார்களாம்.

mano2
ஆனால் ஒரு மனுஷன் 60 வருடங்களாக தயிர் சாதமே மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் என்றால் கொஞ்சம் ஆச்சரியமாக தான் இருக்கிறது என தயாரிப்பாளர் சிவா கூறினார். இதுவும் ஒரு விதத்தில் அவருடைய உடல்நிலை சீர் இல்லாமல் போனதுக்கு காரணம் என்றும் கூறினார்.
இதையும் படிங்க : 102 டிகிரி காய்ச்சலில் கூட படம் நடித்த சிவாஜி! – அதிர்ச்சியடைந்த படக்குழு.. எந்த படம் தெரியுமா?
மேலும் மனோபாலா மிகவும் வருத்தப்பட்ட விஷயம் அவர் தயாரித்த சதுரங்க வேட்டை 2 என்ற படத்தை பற்றி தான் என்று கூறினார். விநியோகஸ்தர்களிடம் இருந்து அவருக்கு பண விஷயம் சார்பாக ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்ததாகவும் கூறினார். அந்தப் படத்தில் லீடு ரோலில் நடித்த அரவிந்த்சாமியும் தனக்கு மீதி பணத்தை கொடுத்தால் மட்டுமே டப்பிங் பேசுவேன் என்றும் கூறினாராம். ஆனால் அவரை தவறாகவும் சொல்ல முடியாது. ஒரு நடிகருக்கு கொடுக்க வேண்டியதை நாம் கொடுத்தே தீர வேண்டும். இருந்தாலும் அரவிந்தசாமியிடம் நாங்கள் அனைவரும் பேசிப் பார்த்தோம். ஆனால் அவர் பணம் கொடுத்தால் மட்டுமே டப்பிங் பேசுவேன் என்று கராராக கூறிவிட்டார். இதுவும் ஒரு விதத்தில் மனோபாலாவிற்கு பெரும் மனகஷ்டத்தை ஏற்படுத்தியது என்று சிவா கூறினார்

mano3