இதுக்கு போய் ஏன் இப்படி?.. ‘வாரிசு’ லாம் ஒரு மேட்டரே இல்ல!.. பாக்யராஜ் பரபரப்பு பேட்டி!..
கோடம்பாக்கத்தையே புலம்ப வைத்த செய்தி என்னவென்றால் விஜயின் வாரிசு பட ரிலீஸ் பிரச்சினை தான். பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா? ஆகாதா என்ற திக் திக் மன நிலையில் தான் ரசிகர்கள் உட்பட தமிழ் திரையுலகமும் இருக்கிறது.
வம்சி இயக்கத்தில் தில் ராஜு இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் தான் வாரிசு. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகிபாபு, சங்கீதா, சம்யுக்தா போன்ற பல நடிகர்களும் சேர்ந்து நடிக்கின்ற ஒரு குடும்ப கதையாக வெளியாக இருக்கிறது வாரிசு திரைப்படம்.
படத்திற்கு இசையமைத்த தமன் வெளியான முதல் சிங்கிளான ரஞ்சிதமே பாடலால் மேலும் பிரபலமாகிவிட்டார். பல மில்லியன் வியூவ்ஸ்களை தாண்டி பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் விஜய் படம் என்றாலே பிரச்சினை இல்லாமல் வராது என்று அவரின் சமீபகால படங்கள் நிரூபித்து வருகின்றன.
இதையும் படிங்க : நடிகர் திலகம் வீட்டை நோக்கி படையெடுக்கும் போலீஸ்?.. மோசடி வழக்கில் சிக்கி தவிக்கும் வாரிசுகள்!..
தலைவா படத்தில் ஜெயலலிதாவிற்கும் எஸ்.ஏ.சிக்கும் இடையே இருந்த சில கருத்து வேறுபாட்டால் படம் வெளியாவதில் மிகுந்த வேதனைக்கு ஆளானார் விஜய். சர்கார் பட ரிலீஸிலும் கதை திருட்டு சம்பந்தமான பிரச்சினையில் மாட்டிக் கொண்டார் விஜய். மாஸ்டர் பட சூட்டிங்கிலேயே வருமான வரித்துறையினரால் மிகுந்த மன வேதனைக்கு ஆளானார்.
இப்படி பல பிரச்சினைகளுடனே ரிலீஸ் ஆகும் விஜய் படம் வாரிசு படத்தை மட்டும் சும்மா விட்டு வைப்பார்களா என்ன? தெலுங்கு புரடியூசர் கவுன்சில் நேரடி தெலுங்கு படத்தை மட்டும் தான் பண்டிகை நாள்களில் வெளியிடுவோம், டப்பிங் படங்களை வெளியிட மாட்டோம் என்று போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.
மேலும் அதில் ஒரு மெம்பராக இருக்கும் தில் ராஜு எப்படியாவது இதை சமாளித்து விடுவார் என்ற நம்பிக்கையில் ஒட்டுமொத்த படக்குழுவுவும் உள்ளது. மேலும் விதிமுறைகளை மீறி யானைகளை படத்தில் பயன்படுத்தியதாக படக்குழுவுக்கு நோட்டிஸும் விடப்பட்டுள்ளது. இப்படி பல பிரச்சினைகளோடு ரிலீஸ் ஆக காத்துக் கொண்டிருக்கிறது வாரிசு படம்.
இதையும் படிங்க : சரத்குமாருக்காக ரஜினி சொன்ன அட்டகாசமான கதை… படமா வந்திருந்தா தாறுமாறா இருந்திருக்கும்…
இதை பற்றி நடிகரும் இயக்குனருமான பாக்யராஜிடம் கேட்டபோது வாரிசு பட ரிலீஸ் பிரச்சினை ஒரு மேட்டரே இல்லை. மற்ற மொழி படங்கள் தங்கள் மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்துவதை யாரும் விரும்பமாட்டார்கள். ஆகவே அவர்கள் பண்ணுவது சரிதான். ஒரு காலத்தில் சிறிய மொழி சினிமாவாக இருக்கும் கன்னட மொழி சினிமா மற்ற மொழி சினிமாக்கள் வந்து கன்னட மொழி சினிமாவை பின்னுக்கு தள்ளக் கூடாது என்று கண்ணும் கருத்துமாக இருந்தன.
ஆனால் அதே சிறிய மொழியில் இருந்துதான் ஒரு பேன் இந்திய சினிமாவாக கேஜிஎஃப், காந்தாரா போன்ற படங்களை நாம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். ஆகவே இந்த மாதிரி பிரச்சினைகள் எல்லாம் வரத்தான் செய்யும் . அதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று கூறினார்.