அதுல ஹைலைட்டே இடுப்புதான்! ஆனால் இதில்? விஜய்தேவரகொண்டா சொன்ன பதிலால் குஷியான ரசிகர்கள்

Published on: August 22, 2023
sam
---Advertisement---

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் குஷி. இந்தப் படம் காஷ்மீரின் பின்னனியில் அமைந்த கதையை அடிப்படையாக கொண்டு இருந்ததால் படப்பிடிப்பு முழுக்க காஷ்மீரில் தான் எடுத்தார்கள்.

இந்த நிலையில் படத்தின் புரோமோஷனுக்காக விஜய் தேவரகொண்டாவும் சமந்தாவும் பல பகுதிகளுக்கு சென்று படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார்கள். இதில் இன்னும் ஒரு படி மேலாக குஷி படத்திற்கான ஒரு மியுஸிக் கான்செர்ட் ஐதராபாத்தில் நடந்தது.

இதையும் படிங்க : தளபதி 68ல் நெல்சன் பட நடிகை!.. பக்கா ஸ்கெட்ச் போட்ட வெங்கட்பிரபு… ஜோதிகான்னு சொன்னதெல்லாம் சும்மாவா?!.

இப்படி குஷி படத்திற்காக பல விதங்களில் விளம்பரப்படுத்தி வரும் படக்குழு அவ்வப்போது பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலும் கலந்து கொண்டு பேட்டி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா சென்னைக்கு வந்த சமயம் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் விஜயை பற்றி கூறியிருந்தார்.

அதாவது விஜய் நடித்த குஷி பட தலைப்பையே இந்தப் படத்திற்கும் வைத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி என்றும் எனக்கு பிடித்தமான நடிகர் நடித்த பட தலைப்பில் நடிப்பதில் மிகவும் சந்தோஷம் என்றும் பதிலளித்தார்.

இதையும் படிங்க : எப்பவும் போல உளறி விஜயிடம் மாட்டிக் கொண்ட வெங்கட்பிரபு!.. தளபதி 68 முடியறதுக்குள்ள என்னென்ன நடக்குமோ!…

மேலும் அந்த குஷி படத்திற்கும் இந்த குஷி படத்திற்கும் எந்த ஒரு ஒற்றுமையும் இல்லை என்பதையும் தெளிவு பட கூறியிருக்கிறார். நம் ரசிகர்களுக்கு குஷி என்றாலே ஜோதிகாவின் இடுப்பு தான் நியாபகம் வரும்.

அந்தளவுக்கு அந்தக் காட்சி மிகவும் பிரபலமானது. அதே போல மறுபடியும் அதே பெயரில் இன்னொரு படம் என்று சொல்லும் போது இரண்டுக்கும் எதாவது ஒரு ஒற்றுமை இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அதை விஜய் தேவரகொண்டா திட்டவட்டமாக கூறிவிட்டார்.

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.