Cinema News
உங்களுக்கு இதெல்லாம் செட்டாகவே இல்ல… ஃபஹத் பாசிலை இப்படி சொல்லிட்டாரே அந்த பிரபலம்…
Fahadh: இந்தியாவின் கொண்டாடப்படும் நடிகர்களுள் முக்கியமானவர் அந்தஸ்தை எட்டிவிட்டார் பஹத் பாசில். மலையாளத்தில் சிறந்த பெர்ஃபார்மரான அவரின் ஆவேசம் படம் மொழி எல்லைகளைக் கடந்தும் கொண்டாடப்பட்டது. `எடா மோனே…’ என்று அவர் பேசிய வசனமும் இல்லுமினாட்டி பாடலும் தேசிய அளவில் வைரல் கண்டண்ட் ஆனது.
அந்தப் படத்துக்கு முன்பாகவே தெலுங்கில் புஷ்பா, தமிழில் விக்ரம், மாமன்னன் என அவர் போகும் இடமெல்லாம் வெற்றிக்கொடி நாட்டி வந்தவர்தான். குறிப்பாக மாமன்னன் படத்தில் அவர் நடித்திருந்த ரத்னவேலு என்கிற வில்லன் கேரக்டர் ஹீரோ உதயநிதி, வடிவேலுவைத் தாண்டியும் பேசப்பட்டது என்றே சொல்லலாம்.
இதையும் படிங்க: முதல் ஆளா சிம்புவா? நம்பிக்கை அதானே எல்லாம்.. கமலால் நடந்த அதிசயம்..
தமிழில் பஹத்தின் சினிமா பயணத்தை மாமன்னனுக்கு முன், மாமன்னனுக்குப் பின் என்றே பிரிக்கும் அளவுக்கான மிரட்டல் நடிப்பு அது. படம் ரிலீஸான பின், அது பிரபலமான மீம் டெம்ப்ளேட்டாகவும் மாறிப்போனது. எதிர்மறை ரோலில் அவர் நடித்திருந்தபோதும், அந்த ரத்னவேலு கேரக்டரை ஒரு தரப்பினர் கொண்டாட அதுபற்றி கவலை தெரிவித்து சோசியல் மீடியாக்கள் ரைட்-அப் வரும் வரைக்கும் நிலைமை சென்றதை மறந்திருக்க முடியாது.
இதுபற்றி ஆங்கில சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பஹத் பாசிலே விளக்கம் அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மாமன்னன் ரத்னவேலு பற்றி பேசுகையில், `அது எனக்கும் அப்பாற்பட்டது. மாமன்னன் ரிலீஸ் ஆன பிறகுதான் நான் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவனாக நடித்திருந்தது பற்றி எனக்கே தெரிய வந்தது.
அந்த கேரக்டர் பற்றி இயக்குநர் சொல்கையில், ரத்னவேலு என்பவன் யார், அவன் என்னவெல்லாம் செய்வான் என்பதைப் பற்றி மட்டுமே கேட்டுக்கொண்டேன். அதன்பிறகு நடந்ததெல்லாம் என் கையை மீறிய விஷயங்கள். இன்னும் நன்றாகப் பார்த்தீர்கள் என்றால் அந்தப் படத்தில் ரத்னவேலுவின் இரு பக்கங்களுமே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
இதையும் படிங்க: எலே இது வேட்டையன் இல்ல அடுத்த தர்பாராம்.. லீக்கான வீடியோவால் ஷாக்கான ரசிகர்கள்
ஆரம்பத்திலேயே அந்த கேரக்டர் நாயைக் கொல்வது போன்ற காட்சிகள் இருக்கும். அதேபோல், சின்ன விஷயமானாலும் அதற்காக வருத்தப்படும் ஆளாகவும் இருப்பான்’ என்று அந்தப் பேட்டியில் பஹத் சொல்லியிருப்பார். உண்மையில், மாமன்னன் படத்தைப் பார்த்துவிட்டு பஹத் பாசிலிடம், காதல், காமெடி கதைகளைத் தேர்ந்தெடுங்கள் என்று இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அறிவுரை சொன்னாராம். மேலும், `நீங்க அப்பப்போ காமெடி, ரொமான்ஸ் படங்கள் எல்லாம் பண்ணுங்க.
இந்த கண்ணை வைச்சுக்கிட்டு நல்லா ரொமான்ஸ் பண்ணலாமே? மாமன்னன் பார்த்தா உங்க மேல பயம் வருது. இப்படியே பண்ணிட்டு இருந்தா உங்களைப் பார்த்தாலே மக்கள் மனசுல பயம்னு பழகிடும்’ என்றும் ஏ.ஆர்.ரஹ்மான் அக்கறையாகச் சொன்னாராம்.