என் நிச்சயதார்த்த வரவேற்பில் நின்ற ஜெயலலிதா!..எங்க விரிசலுக்கு இது தான் காரணம்!..சொல்கிறார் பிரபல நடிகர்!..

by Rohini |
jaya_main_cine
X

நடிகர் ரஜினி மற்றும் கமலுடன் பல படங்களில் சேர்ந்து நடித்தவர் ஒய்.ஜி.மகேந்திரன். இருவரிடமும் நல்ல நட்பு பாராட்டி வருபவர். சிவாஜியின் வெறியன் என்றே மகேந்திரனை சொல்லலாம். அந்த அளவுக்கு நடிகர் திலகம் சிவாஜி மீது தீராத காதல் கொண்டவர்.

jaya1_cine

ஒரு சமயம் இவரை கடுப்பேத்துவதற்காகவே கமல் சிவாஜியை பற்றி பேசி சீண்டி பார்த்திருக்கிறார்.அவ்ளோதான்
கமலிடம் கோவப்பட்டு அன்றைக்கு இருவரும் ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருந்த சமயம். சிவாஜியை பற்றி பேசிவிட்டார் என்று படப்பிடிப்புக்கு வரமாட்டேன் என்று சென்று விட்டார். அந்த அளவுக்கு சிவாஜியின் மீது அலாதி பிரியம் கொண்டவர்.

இதையும் படிங்க : சிவக்குமாரின் அட்வைஸை மதிக்காத சத்யராஜ்!..இப்போ எந்த நிலைமையில இருக்காருனு பாருங்க!..

பல நாடகங்களை அரங்கேற்றி அதன் மூலம் மிகவும் பிரபலமானவர். மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் ஒரு சகோதரனை போல பழகியவர். ஜெயலலிதாவை அக்கா என்றே தான் அழைப்பாராம். மகேந்திரன் நிச்சயதார்த்ததிற்கு வரவேற்ப்பில் நின்று எல்லாரையும் வரவேற்றவர் ஜெயலலிதானாம். அந்த அளவுக்கு நெருக்கமாக பழகியிருக்கின்றனர்.

jaya2_cine

ஆனால் ஒரு நேரத்தில் இருவருக்கும் ஒரு விரிசல் ஏற்பட்டு அதன் பிறகு ஜெயலலிதாவை பார்க்கவே இல்லையாம் மகேந்திரன். ஆனால் காரணம் என்ன என்பது தெரியவில்லை, ஒரு வேளை என்னுடைய 50 ஆவது ஆண்டு நாடக பொன்விழாவிற்கு தலைமை தாங்க அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியை சிறப்பிக்க அழைந்திருந்தேன். அது கூட காரணமாக இருக்கலாம் என மகேந்திரன் கூறினார்.

Next Story