புரூஸ்லியிடம் ஜாக்கிசான் சொன்ன அந்த பொய்!.. என்ன நடந்ததுன்னு தெரியுமா?..
அகில உலக சூப்பர்ஸ்டாராக கருதப்படுவர் நடிகர் ஜாக்கிசான். பாங்காக்கில் பிறந்து வளர்ந்து சீன படங்களில் நடிக்க துவங்கி அப்படியே ஹாலிவுட் பக்கமும் சென்று அங்கும் தனது கொடியை நாட்டியவர். சண்டை காட்சிகள் என்றாலே சீரியஸாகவும், ஆக்ரோஷமாகவும் இருக்கும் என்கிற நிலையை மாற்றி, சண்டை காட்சிகளில் காமெடியை புகுத்தி ரசிகர்களை ரசிக்க வைத்தவர்.
அதனால்தான் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இவரின் திரைப்படங்கள் அனைவருக்கும் பிடிக்கும். உலகம் முழுவதும் இவரின் படங்கள் வெளியாவதால் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தியாவிலும், ஏன் தமிழகத்திலும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.
நம் எல்லோருக்கும் பிடித்தவர் ஜாக்கிசான் எனில் ஜாக்கிசானுக்கு பிடித்த ஒருவர் இருந்தார் எனில் அது புரூஸ்லிதான். சினிமாவில் ஹீரோ ஆவதற்கு முன்பு, புரூஸ்லி கதாநாயகனாக நடித்து வந்த படங்களில் சண்டை காட்சிகளில் அவரிடம் அடி வாங்கும் நடிகர்களில் ஒருவராக ஜாக்கிசான் நடித்துள்ளார்.
அப்படி ஒரு காட்சியின் போது ஜாக்கிசானின் தலையில் அடித்துவிட்டாராம் புரூஸ்லி. உடனே ஜாக்கிசானிடம் சென்று ‘வலிக்கிறதா?’ என கேட்டாராம். தனக்கு மிகவும் பிடித்த நடிகர் தன்னிடம் பேசுவது தொடர வேண்டும் என்பதற்காக ‘ஆமாம்.. மிகவும் வலிக்கிறது’ என அவரிடம் பொய் சொன்னாராம் ஜாக்கிசான்.
இதையடுத்து ஜாக்கிசானை மருத்துவமனையில் சேர்த்து அவரை நாள் முழுக்க பார்த்துக்கொண்டாராம் புரூஸ்லி. அடிக்கடி ‘இப்போது எப்படி இருக்கிறது?. வலி குறைந்துவிட்டதா?’ என ஜாக்கிசானை கேட்டுக்கொண்டே இருந்தாராம். தனக்காக வருத்தப்பட்டு அன்று முழுவதும் புரூஸ்லி தன்னிடம் பேசிக்கொண்டிருந்தது தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும், அந்த நாளை தன்னால் மறக்கவே முடியாது எனவும் ஜாக்கிசான் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: வெறித்தனம் ஓவர்லோடு… வெளியானது “தளபதி 67” படத்தின் மாஸ் டைட்டில்…