ஜடேஜாவின் ஃபேவரிட் தமிழ் பாடல் என்ன தெரியுமா? அட நம்ம கேப்டன் எல்லா இடத்திலயும் கில்லியா இருக்காருப்பா..!

by Akhilan |   ( Updated:2022-11-30 15:59:05  )
ஜடேஜாவின் ஃபேவரிட் தமிழ் பாடல் என்ன தெரியுமா? அட நம்ம கேப்டன் எல்லா இடத்திலயும் கில்லியா இருக்காருப்பா..!
X

Jadeja

இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவிற்கு பிடித்த தமிழ் பாடல் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஜனவரி 2000ல் வெளியான திரைப்படம் வானத்தை போல. பிரபலமான திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை இப்படம் வென்றது. தொடர்ந்து 250 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி, வணிகரீதியாக தமிழில் பெரும் வெற்றிபெற்ற படமாகும்.

vanathai pola

பல இந்திய பிராந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம், போஜ்புரி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது இப்படம். தெலுங்கில் ராஜசேகரை வைத்து மா அன்னய்யா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தில் விஜயகாந்த், பிரபுதேவா, லிவிங்ஸ்டன், மீனா, கௌசல்யா ஆகியோர் நடித்திருந்தனர்.

இதையும் படிங்க: அஜித்துக்கு ரஜினி ரெக்கமன்ட் செய்த திரைப்படம்… பின்னாளில் மாஸ் ஹிட் ஆன தரமான சம்பவம்… இது தெரியாம போச்சே!!

இப்படத்தில் விஜயகாந்த் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ஆஸ்கார் ஃபிலிம்ஸின் கீழ் வேணு ரவிச்சந்திரன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்துள்ளார் மற்றும் ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தனது மூன்று இளைய சகோதரர்கள் வாழ்க்கையில் வெற்றிபெற தியாகங்களைச் செய்யும் அக்கறையுள்ள சகோதரனின் கதையை படம் சொல்கிறது.

ashwin_Jadeja

இப்படத்தில் எல்லா பாடல்களுமே மிகப்பெரிய ஹிட் கொடுத்தாலும் எங்க வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பாடலுக்கு இன்றும் ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள். இந்த பாடலை விழாக்காலங்களிலும், வீட்டு விழாக்களிலும் போடாமல் இருக்கவே மாட்டார்கள்.

இப்படிப்பட்ட இந்த பாடல் தான் இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் ஃபேவரிட்டாம். ஜிம்மில் இருக்கும் போதும், ஃப்ரீயாக இருக்கும் போதும் கேட்பதை வழக்கமாக வைத்திருப்பாராம். கேப்டன் குறித்து தெரிந்து கொள்ள நினைத்த ஜடேஜா சக கிரிக்கெட் வீரர் அஸ்வினிடம் பேசி தெரிந்து கொள்வாராம். ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியில் முக்கிய வீரராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story