நாடு முழுவதும் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் கேரளாவில் உள்ள எடப்பள்ளி – வைடில்லா தேசிய நெடுஞ்சாலை காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பல பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
அந்த போக்குவரத்து நெரிசலில் தான் பிரபல மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜும் காரில் சிக்கிக்கொண்டார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ஜார்ஜ் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசாரிடம் சென்று போராட்டத்தில் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என கூற ஜார்ஜுடன் சேர்ந்து சில பொதுமக்களும் குரல் கொடுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த காங்கிரசார் நடிகர் ஜார்ஜ் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும், பெண் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் தகாத முறையில் நடப்பதாகவும் பொய் குற்றம் சாட்டி நடிகர் ஜார்ஜின் காரை அடித்து நொறுக்கி உள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் நடிகர் ஜார்ஜை பத்திரமாக மீட்டு அந்த இடத்தில் இருந்து அழைத்து சென்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பேசிய நடிகர் ஜோஜூ ஜார்ஜ், “நான் ஏதும் குறிப்பிட்ட கட்சிக்கு எதிராக போராடவில்லை. அவர்களது போராட்ட முறைகளுக்கு எதிராகதான் போராடினேன். எனது காருக்கு அடுத்த காரில் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுக்கக்கூடிய இளம் நோயாளி இருந்தார்.
அவர்கள் நான் குடித்திருந்ததாக புகார் செய்துள்ளனர். மேலும் சில தலைவர்கள் மற்றும் என்னுடைய தாய், தந்தை பற்றி அவதூறாக பேசினார்கள். ஒருவேளை அவர்கள் என்னை பேசலாம். அடிக்கலாம். ஆனால், எனது பெற்றோர்கள் என்ன செய்தார்கள்?” என மிகவும் வேதனையுடன் கூறியுள்ளார்.
நடிகர் ஜோஜூ ஜார்ஜ் ஒரு நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், நடிப்பிற்கான தேசிய விருதை வென்றுள்ள ஜார்ஜ் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…