ஜெய் பீம் படத்தில் நடித்ததால் சிறுமிக்கு நேர்ந்த சோகம் - நிஜத்திலும் உதவுவாரா சூர்யா?

by பிரஜன் |
alli
X

alli

சூர்யாவின் ஜெய் பீம் படத்தின் நடித்ததற்காக பள்ளியில் TC கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட சிறுமி!

இருளர் இன மக்கள் குறித்து சமூகத்தில் உள்ள பிற ஜாதியினர்களால் அவர்கள் ஒடுக்கப்படுவதை குறித்தும் முதன் முறையாக தமிழ் சினிமாவில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ஜெய்பீம். ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ள இந்த திரைப்படம் வெகுஜன மக்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது .

இந்த படத்தில் இருளர் இனத்தை ஒடுக்கப்பட்ட பெண்ணாக நடிகை லிஜோமல் ஜோஸ் மற்றும் மணிகண்டன் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என்றும் கிடைத்தால் அது அந்த விருதுக்கு கிடைத்த பெருமை எனவும் மக்கள் கூறி வருகின்றனர்.

Alli

Alli

இந்நிலையில் இந்த படத்தில் செங்கேணியின் மகளாக நடித்திருந்த சிறுமி கிளைமாக்ஸ் சீனில் சூர்யாவுடன் கால் மேல் கால் போட்டு அமர்ந்து செய்தித்தாள் படிக்கும் காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

பலதரப்பினரிடம் இருந்து அந்த சிறுமிக்கு பாராட்டுக்கள் கிடைத்து வரும் நேரத்தில் அந்த சிறுமிக்கு ஒரு கொடுமை நடந்தேறியுள்ளது. ஆம், அந்த படத்தில் நடித்ததற்காக பள்ளியில் இருந்து TC கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். இதையடுத்து பலரும் அந்த குழந்தைக்கு ஆதரவு கூறி பள்ளி நிர்வாகத்தின் மீது தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: என்ன தெரியுதோ பாத்துக்குங்க!.. ஓப்பனா போஸ் கொடுத்த தமன்னா…

இந்த தகவல் சூர்யாவின் காதிற்கு சென்றால் அவர் விரைந்து அதற்காக தக்க நடவடிக்கைகளை எடுத்து குழந்தையின் கல்விக்கு நிச்சயம் பெரிதும் உதவுவார் என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Next Story