கோர்ட்ல நீதி கிடைக்கலன்னா ரோட்ல இறங்கி போராடுவேன் - ஜெய்பீம் டிரைலர்!

jai beem Trailer
ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று திரைப்படத்தில் நடித்திருக்கும் சூர்யாவின் ஜெய் பீம் ட்ரைலர் வெளியாகியது.
பழங்குடியின மக்களின் ஒடுக்குமுறை குறித்த வரலாற்றை திரைப்படமான ஜெய்பீம் படத்தை நடிகர் சூர்யா 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் தயாரித்துள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படம் பழங்குடியினத் தம்பதியரான செங்கேணி மற்றும் ராஜகண்ணு ஆகியோரின் வாழ்வியலை எடுத்துரைக்கிறது.

jai beem Trailer
ஒருவர் மீது ஒருவர் பாசமாக வாழ்ந்து வந்த அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு ராஜகண்ணு போலீசாரால் கைது செய்யப்பட்டு சித்ரவதை அனுபவிக்கிறார். அப்போது காவலர்களின் கொடுமை தாங்கமுடியாமல் காவல் நிலையத்தில் இருந்து காணாமல் போகும் ராஜகண்ணுவை அவரது மனைவி செங்கேணி தேடத் தொடங்குகிறாள். இது தொடர்பாக பிரபல உயர்நீதிமன்ற வழக்கறிஞரான சந்துருவின் (சூர்யா) உதவியை நாடுகிறாள். ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காக போராடும் சந்துரு தனது முயற்சியில் வெற்றி பெறுகிறாரா..? என்பது கதை.

Jai Bhim trailer
இதில் ஒடுக்கப்பட்ட பெண்ணாக நடிகை லிஜோமல் ஜோஸ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரை பின்தொடர்ந்து தான் படத்தின் கதை நகர்கிறது. நவம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகப்போகும் இப்படத்தின் ட்ரைலர் தற்ப்போது யூடியூபில் வெளியாகி பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்: கொஞ்சம் காத்தடிச்சாலும் மானம் போயிடும்..ராய் லட்சுமி வெளியிட்ட ஹாட் வீடியோ…

Jai Bhim trailer