மாஸாக வெளியான 'ஜெய்பீம்' கிளிம்ப்ஸி வீடியோ.. செம கெட்டப்பில் சூர்யா!

by adminram |
jai bhim
X

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. தமிழ் சினிமாவில் நேற்று வந்த நடிகர்களெல்லாம் தங்கள் பெயருக்குப் பின்னால் பட்டம் சூட்டிக்கொண்ட நிலையில் சூர்யா மட்டும் பட்டம் ஏதும் வேண்டாம் என மறுத்து நடித்து வருகிறார்.

கடந்த சில வருடங்களாக வெற்றிப்படம் ஏதும் கொடுக்காமல் தவித்து வந்த இவருக்கு, கடந்த ஆண்டு இறுதியில் வெளியான 'சூரரைப்போற்று' படம் இவர் நடிப்புக்கு தீனிபோடும் வகையில் அமைந்தது மட்டுமல்லாமல் மிகப்பெரிய வெற்றியும் பெற்றது.

இதையடுத்து தனது இரண்டாவது இன்னிங்க்சை துவங்கியுள்ள சூர்யா பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி யுள்ளார். தற்போது இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதுமட்டுமின்றி அறிமுக இயக்குனர் ஞானவேல் இயக்கும் 'ஜெய்பீம்' என்ற படத்தில் வழக்கறிஞராக நடித்து வருகிறார். இதில் சேரி வாழ் பகுதி மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞராக நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி இப்படத்தை தன சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டெர்டைன்மெண்ட் மூலம் தயாரித்து வருகிறார்.

jai bhim

jai bhim

முதலில் இப்படத்தை சூர்யா தயாரிப்பதாக மட்டும்தான் இருந்தது. ஆனால்,இப்படத்தின் கதையை கேட்டபின் இதில் நடிப்பதாக கூறி, தற்போது நடித்து வருகிறார். இதில் ஆவேசமான வசனங்கள் பல இடம்பெற்றுள்ளதால் இப்படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் கிளிம்ப்ஸி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சூர்யா வக்கீல் கெட்டப்பில் மாஸாக இருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. நவம்பர் 2ம் தேதி இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story