’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் அந்த வாய்ப்பை தவறவிட்டேன்...! வருத்தப்படும் இளம் நடிகர்..!

by Rohini |
simbu_main_cine
X

2010 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு , திரிஷா நடிப்பில் வெளியான காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த படம் பெரிய அளவில் வெற்றி பட்ட படமாகும். மேலும் சிம்பு கெரியரில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படமும் கூட.

simbu1_cine

சிம்புவிற்கு மட்டுமின்றி கௌதம் மேனனுக்கும் இந்த படம் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் விண்ணைத்தாண்டி வருவாயா படம். இந்த படத்தில் உள்ள கதாபாத்திரங்களான கார்த்தி, ஜெஸ்ஸியை வைத்து இன்று வரை ஏராளமான ரீல்ஸ் வீடியோக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த அளவிற்கு மனதில் ஆழமாக பதிந்துள்ள கதாபாத்திரங்களாகும்.

simbu2_cine

இந்த நிலையில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான நடிகர் ஜெய் இந்த படத்தின் சில அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துள்ளார். அதாவது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் முதலில் நடிக்க வேண்டியது நான் தான் எனக் கூறியுள்ளார். சில பல காரணங்களால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது.

simbu3_cine

அந்த படத்தில் மட்டும் நடித்திருந்தால் இன்னைக்கு அவர் மார்க்கெட்டே வேற மாதிரி இருந்திருக்கும். மேலும் உச்சத்திற்கே சென்றிருப்பார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Next Story