நண்பர்களுக்காக படத்தின் பெயரை மாற்றிய இயக்குனர்.... இந்த பெயர் கூட நல்லா தான் இருக்கு....!

by Rohini |
jai
X

விஜய் நடிப்பில் வெளியான பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் தான் நடிகர் ஜெய். அதனை தொடர்ந்து சுப்ரமணியபுரம் படம் மூலம் ஒரு அதிரடி ஹீரோவாக களமிறங்கினார். இப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

jai3

இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்த ஜெய் ஓரளவிற்கு மினிமம் கியாரண்டி நடிகர் என்ற பெயரை பெற்றார். ஆனால் சமீபகாலமாக இவரின் படங்கள் எதுவும் சொல்லி கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. அதேபோல் இவரும் குடிப்பழக்கம் போன்ற சில சொந்த பிரச்சனைகளில் சிக்கி இருந்தார்.

இந்நிலையில் தற்போது ஜெய் சூப்பர் ஹிட் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்று மூலம் கம்பேக் கொடுக்கிறார். முன்னதாக இந்த படத்திற்கு சிவ சிவா என தலைப்பு வைத்திருந்தார்கள். ஆனால் தற்போது படத்தின் இயக்குனர் சுசீந்திரன் அந்த தலைப்பை மாற்றி புதிய பெயரை அறிவித்துள்ளார்.

jai1

இது குறித்து சுசீந்திரன் கூறியிருப்பதாவது, "பத்திரிக்கை மற்றும்‌ ஊடக நண்பர்கள்‌ அனைவருக்கும்‌ வணக்கம்‌. Lendi Studios தயாரிப்பில்‌, ஜெய்‌ நடிப்பில்‌ சிவ சிவா என்ற படத்தை இயக்கி முடித்துள்ளேன்‌. விரைவில்‌ இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்‌. Final Mixing-ல்‌ இப்படத்தை பார்த்த என்‌ நண்பர்கள்‌ வெகுவாக என்னையும்‌, என்‌ படக்குழுவினரையும்‌ பாராட்டினார்கள்‌.

ஆனால் அவர்கள்‌ என்னிடம்‌ ஒரு வேண்டுகோளை முன்‌ வைத்தார்கள்‌. இப்படம்‌ கிராமம்‌ சார்ந்த படம்‌ என்பதால்‌, சிவ சிவா என்ற தலைப்பிற்கு மாற்றாக மண்சார்ந்த கிராமத்து தலைப்பு இருந்தால்‌ இன்னும்‌ இப்படத்திற்கு கூடுதல்‌ பலம்‌ சேர்க்கும்‌ என்று கூறினார்கள்‌. எனவே அவர்கள்‌ கூறிய ஆலோசனையில்‌ எனக்கும்‌ உடன்பாடு ஏற்பட்டது.

jai2

அதனால் தயாரிப்பாளர்‌ சம்மதத்துடன்‌ என்‌ உதவியாளர்களுடன்‌ ஆலோசித்து சிவ சிவா என்ற தலைப்பிற்கு மாற்றாக வீரபாண்டியபுரம்‌ என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளோம்‌ என்பதை மகிழ்ச்சியுடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌" என கூறியுள்ளார். சுப்ரமணியபுரம் படத்தை போல இந்த வீரபாண்டியபுரம் படமும் நிச்சயம் ஜெய்க்கு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story