படத்துலதான் உங்க சித்தாந்தமா? நிஜவாழ்க்கையில்? ‘ஜெய்பீம்’ ரியல் பார்வதியின் தற்போதைய நிலைமை

by Rohini |
jai
X

jai

த ச ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஜெய் பீம். இந்த திரைப்படம் வெளியான போது இந்திய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. நிஜத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் மீது திருட்டுப் பட்டம் கட்டி காவல்துறையினரால் விசாரணை என்ற பெயரில் மிகவும் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம். இதை அடிப்படையாக வைத்து தான் இந்த ஜெய்பீம் திரைப்படம் உருவானது.

இதில் பார்வதி ராஜேந்திரனாக நடிகை லிஜோமோல் ஜோஸ் நடித்திருப்பார். ஆனால் இந்த கேரக்டரின் உண்மையான பார்வதி இன்னும் உயிரோடுதான் இருக்கிறார். முதலில் இந்த படத்தின் இயக்குனர் ஞானவேல் விருத்தாச்சலத்தில் எழுத்தாளராக இருந்த கண்மணி என்பவரிடம் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் வட்டார வழக்கு இங்கு பேசுபவர்களின் வட்டார வழக்கு ஆகியவைகள் எங்களுக்கு வேண்டும். அதனால் அதை தாங்கள் தான் கைப்பட எழுதி தர வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: குட் பேட் அக்லி படத்தில் மீனா மற்றும் சிம்ரனா? ஷாக்கான படக்குழு… உண்மை என்ன தெரியுமா?

தான் எடுக்கும் அந்த படத்திற்கு எலிவேட்டை என்ற தலைப்பு வைத்திருப்பதாகவும் கூறினார்களாம். எழுத்தாளர் கண்மணியும் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அங்குள்ள வட்டார வழக்குகளை எழுதிக் கொடுத்திருக்கிறார். இதனால் சூர்யாவின் 2d நிறுவனத்தில் இருந்து அந்த எழுத்தாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் தரப்பட்டுள்ளதாம். இந்த படம் வெளிவந்தபோது எழுத்தாளருக்கு ஒரே அதிர்ச்சியாம்.

நம்மிடம் சொன்ன கதை வேறு. தலைப்பு வேறு. ஆனால் இங்கு எடுக்கப்பட்டதோ வேறு . தன்னிடம் வேறு கதையை சொல்லி இங்க உள்ள வட்டார வழக்குகளை தன்னை ஏமாற்றி வாங்கி விட்டதாக அவர் நினைத்திருக்கிறார். இது ஒரு புறம் இருக்க தற்போது அந்த பார்வதி ராஜேந்திரன் வீடு இல்லாமல் குடிசை வீடு கூட இல்லாமல் கிடைக்கிற குச்சிகளை எல்லாம் வைத்து தனக்கென குடில் அமைத்து அதில் தங்கி இருக்கிறாராம்,

இதையும் படிங்க: பாரதிராஜாவிடம் சிக்கி சின்னாபின்னமான பாண்டியன்!.. ஷாக் தகவலை சொன்ன ரேவதி!. இவ்வளவு நடந்திருக்கா!..

ஆனால் இந்த படம் வெளியான போது ஒரு பிரபல நடிகர் ஒருவர் நேராக இந்த பார்வதி ராஜேந்திரனை சந்தித்து அவருக்கு நான் வீடு கட்டி தருகிறேன் என்று சொன்னதாகவும் ஆனால் இதுவரை அந்த நடிகர் அதற்கான முன்னெடுப்புகளை எடுக்கவில்லை என்றும் தெரிகிறது, மேலும் இந்த ஜெய்பீம் திரைப்படம் வெளியானதிலிருந்து ஏகப்பட்ட விருதுகளையும் பல கோடி ரூபாய் ரொக்கப் பரிசுகளையும் வென்றிருக்கிறது, அதிலிருந்து இந்த பார்வதி ராஜேந்திரனுக்கு ஒரு தொகை கொடுக்கப்பட்டதா என்றால் இல்லை என்று சொல்லப்படுகிறது.

ஆனால் ஆரம்பத்தில் இந்த பார்வதி ராஜேந்திரனுக்கு 10 லட்சம் ரூபாய் அவருடைய வங்கிக் கணக்கில் பிக்சட் டெபாசிட் ஆக மட்டுமே போடப்பட்டிருக்கிறதாம். அதிலிருந்து வட்டி என்று பார்த்தால் ஒரு சில கணிசமான தொகை மட்டும் வருமே ஒழிய அன்றாட வாழ்க்கைக்கு அவருக்கு தேவையானது கிடைக்குமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இதையும் படிங்க: ‘விசில் போடு’க்கு பின்னாடி இப்படி ஒரு சம்பவம் இருக்கா? ‘கோட்’ படம் குறித்து முக்கிய அப்டேட் சொன்ன பிரபலம்

இந்த தகவலை மிகவும் ஆதங்கத்துடன் வெளிப்படுத்தினார் பிரபல மூத்த பத்திரிகையாளரான செய்யாறு பாலு. மேலும் அவர் கூறிய போது இவ்வளவு கோடிகளைஅந்த நபரை வைத்து சம்பாதிச்சு இருக்கீங்களே அவர் இப்போது வீடு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் அவருக்கு உதவ வேண்டும் என நினைத்தீர்களா என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Next Story