Categories: latest news

ஜெயிலர் 2 படத்தின் டைட்டில் இதுதானா? நெல்சன் திலீப்குமார் போட்ட ஸ்கெட்ச்…

Jailer2: ரஜினிகாந்தின் சூப்பர்ஹிட் திரைப்படமான ஜெயிலர்2 கதையை நெல்சன் தயார் செய்துவிட்ட நிலையில் அதற்கான சில சுவாரஸ்ய அப்டேட்கள் இணையத்தில் லீக்காகி இருக்கிறது.

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான திரைப்படம் ஜெயிலர். இப்படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கி இருந்தார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இப்படத்திற்கு அவரின் இசை மிகப்பெரிய அளவில் உதவி செய்து இருந்தது.

இதையும் படிங்க: கேப்டனாக மாறிய வினுசக்கரவர்த்தி! கலாட்டா செய்த ரசிகர்களை என்ன செய்தார் தெரியுமா?

ஹுக்கும் பாடல் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அதையடுத்து ரிலீஸான திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ரஜினிகாந்தின் கேரியரில் இப்படம் முக்கிய மைல்கல்லாக அமைந்துவிட்டது. இதனால் அவரும் கேப்பே விடாமல் தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி விட்டார்.

வேட்டையன் படத்தினை தொடர்ந்து தலைவர்171 படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தினை அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருக்கிறது. இந்த தகவல் ஏற்கனவே கசிந்துவிட்டது. அதற்கான ஸ்கிரிப்ட் பணிகளில் நெல்சன் இறங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: விஜய்க்காக இறங்கி வந்த லாரன்ஸ்! அடுத்து அரசியலிலும் ஆட்டம் காட்டுவார்களா? வைரலாகும் வீடியோ

இந்நிலையில் அப்படத்திற்கு ஹுக்கும் எனப் பெயர் வைக்க இருப்பதாக தற்போது தகவல் கசிந்துள்ளது. இப்படத்தின் வில்லனாக பாலிவுட்டை சேர்ந்த முன்னணி நடிகர் நடிக்க இருக்கிறாராம். இப்படத்தின் முதற்கட்ட பணிகளில் ஜூனில் தொடங்க இருக்கிறதாம். இப்படத்தின் படப்பிடிப்புகள் இந்த வருட கடைசியில் தொடங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Akhilan

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

4 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

5 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

5 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

7 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

7 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

13 hours ago