மீண்டும்.. மீண்டுமா!.. ஜெயிலர் 3வது சிங்கிளும் முட்டு சந்தில் விஜய்யை வைத்து பொளக்குதா?..

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் 3வது சிங்கிள் பாடலை சன் பிக்சர்ஸ் அறிவித்ததை போலவே அதிரடியாக வெளியிட்டுள்ளது.

ஜெயிலர் படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடலான ஹுகும் பாடலிலேயே ”உன் அலும்ப பார்த்தவன்.. உங்கப்பன் விசில பார்த்தவன், உன் மவனும் பேரனும் ஆட்டம் போட வைப்பவன்” ”மற்றும் பெயரை தூக்க நாலு பேரு, பட்டத்தை பறிக்க நூறு பேரு” என பாடல் ஆசிரியர் சூப்பர் சுப்பு ரஜினிகாந்தின் அத்தனை ஹேட்டர்களுக்கு மொத்தமாக தலையில் இடியை இறக்குவது போல வரிகளை எழுதி இருந்தார்.

இந்நிலையில், அதை விட எக்கச்சக்க பிட்டு போட்டு நடிகர் விஜய்க்கு ஆப்பு அடிக்கும் வகையிலேயே 3வது சிங்கிளையும் உருவாக்கி உள்ளனர் என ரஜினிகாந்த் ரசிகர்கள் விஜய் ரசிகர்களை சமூக வலைதளங்களில் வரிந்துக் கட்டிக் கொண்டு வம்பிழுத்து அலப்பறையை கிளப்பி வருகின்றனர்.

ஜெயிலர் 3வது சிங்கிள் வெளியானது:

பீஸ்ட் படம் சொதப்பிய நிலையில், ஏகப்பட்ட ட்ரோல்களை இயக்குநர் நெல்சன் சந்தித்தார். எந்தவொரு பேட்டியும் கொடுக்காமல் அமைதியாக ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கி வரும் நெல்சன் பெரிய சம்பவத்தை செய்ய காத்திருக்கிறார் என்றே தெரிகிறது.

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னதாகவே ரஜினிகாந்தையும் ரஜினிகாந்தின் சூப்பர்ஸ்டார் பட்டத்தையும் குறிவைத்த சிலரை டார்கெட் செய்து ஒவ்வொரு பாடல்களும் வெளியாகி வருவதாகவும் குறிப்பாக சூப்பர்ஸ்டார் டைட்டிலுக்கு ஆசைப்பட்ட நடிகர் விஜய்க்கு மறைமுகமாகவே எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஹுகும் பாடலை தொடர்ந்து ஜுஜுபி பாடலும் அமைந்துள்ளது என ரஜினிகாந்த் ரசிகர்கள் விஜய் ரசிகர்களை வம்பிழுத்து வருகின்றனர்.

சூப்பர் சுப்பு சம்பவம்:

காவாலா பாடல் வெளியான போது நடிகர் ரஜினிகாந்தை விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக அது தமன்னா பாடல் என்றும், அதில் தாத்தா ரஜினி ஏன் குறுக்கே வருகிறார் என கலாய்த்து வந்த நிலையில், ஹுகும் பாடல் மூலம் சூப்பர் சுப்பு தரமான சம்பவத்தை செய்திருந்தார்.

இந்நிலையில் ஜுஜுபி எனும் ஜெயிலர் படத்தின் 3வது சிங்கிளில் இடம்பெற்றுள்ள வரிகள் செகண்ட் சிங்கிளை விட வெளிப்படையாக ஹேட்டர்களை கதறவிடும் அளவுக்கு உருவாக்கி உள்ளார்.

மீண்டும் மீண்டுமா:

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தில் ரெட்டின் கிங்ஸ்லி சொல்லும் மீண்டும் மீண்டுமா டயலாக்கை போட்டே மறுபடியும் விஜய் ரசிகர்களை வச்சு செஞ்சிருக்காரே சூப்பர்ஸ்டார் என ஜுஜுபி பாடல் வரிகள் ஒவ்வொன்றையும் ரசிகர்கள் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

பாடலின் துவக்கத்திலேயே “களவாணி கண்ணைய்யா காளைக்கே கொம்ப சீவிப்புட்ட.. அது முட்டிக் கிழிச்சு வீசாம்மா தான் விடும்மா உன்னையா” என ஆரம்பிக்கிறது. அத்துடன் நிறுத்தாமல் பாடல் முழுக்கவே ஒவ்வொரு வரிகளும் சும்மா இடி மாதிரி இறங்கி இருக்கிறது.

கூட்டிக் கழிச்சு கணக்க முடிக்காம விடமாட்டாரு, பகையை வளர்க்காத பலியாகாதே, கரன்ட்ட தொட்டுட்ட அது தூக்கி அடிக்காம விடுமா உன்னையா என ரஜினிகாந்த் ரசிகர்கள் சோஷியல் மீடியா சண்டை செய்ய தேவையான அத்தனை வரிகளையும் சூப்பர் சுப்பு சும்மா வடித்துக் கொடுத்துள்ளார்.

மீண்டும் மீண்டும் நடிகர் விஜய்யை இப்படியா வச்சு செய்வது, என ரஜினிகாந்த் ரசிகர்கள் கலாய்த்து வர, இதெல்லாம் ஒரு பாட்டா என விஜய் ரசிகர்கள் இன்னொரு பக்கம் ஜுஜுபி பாடல் படு மொக்கை என ட்ரோல் செய்து வருகின்றனர்.

Related Articles
Next Story
Share it