தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 1980 முதல் இப்போது வரை சினிமாவில் தனது இடத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் ஆக்டிவாக நடித்து வரும் நடிகர் இவர். சூப்பர்ஸ்டார் என்கிற பட்டத்தை கூட இவர் தேடிச்செல்லவில்லை.
அந்த பட்டம் அவரை தேடி வந்தது. அதற்கு காரணம் அவர் நடித்த அனைத்து படங்களும் ஹிட் அடித்து வசூலை வாரி குவித்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சனின் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியாகி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஜெயிலர். கடந்த 10ம் தேதி வெளியான இந்த திரைப்படம் தமிழ்நாடு மட்டுமில்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க: எஸ்பிபியையும் தாண்டி ரஜினிக்கு மாஸ் ஓப்பனிங் சாங் கொடுத்த சிங்கர்ஸ்! ‘ஜெய்லர்’ படத்தில் நடந்த மேஜிக்
ரஜினி நடிப்பில் வெளிவந்த தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே, இந்த படத்தின் மீது ரஜினி அதிக நம்பிக்கை வைத்திருந்தார். அவர் எதிர்பார்த்தது போலவே இப்படம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இந்த படத்தின் வெற்றி ரஜினியை உற்சாகப்படுத்தியுள்ளது.
படம் வெளியாகி 9 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் தமிழகத்தில் ரூ.149 கோடி, ஆந்திராவில் ரூ. 59 கோடி, கேரளாவில் ரூ.40 கோடி, கர்நாடகாவில் ரூ.52 கோடி மற்ற மாநிலங்களில் ரூ.8 கோடி மற்றும் வெளிநாடுகளில் ரூ.162 கோடி என இதுவரை மொத்தம் ரூ.468 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இதையும் படிங்க: ‘சூப்பர் ஸ்டார்’ ஆகனும்னு ஆசை இருந்தால் இதெல்லாம் விட்டுக் கொடுங்க! முன்னனி நடிகர்களுக்கு சவால் விடும் பிரபலம்
ரஜினியின் போட்டியாளராக கருதப்படும் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் ரூ.400 கோடி வசூல் செய்திருந்தது. அதை ஜெயிலர் படம் தாண்டிவிட்டது. இந்த வார இறுதிக்கு பின் இப்படம் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வசூல் செய்த ரூ.500 கோடியை தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவலை ரஜினி ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தலீவனுக்கு தில்லை பார்த்தியா!.. எல்லாம் வடை ஃபேக்டரி ஓனர்களாம்.. பிரபலங்களை கதற விட்ட ப்ளூ சட்டை!
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…