தயாரிச்சிட்டா அவங்களால இதெல்லாம் பண்ண முடியாது… ஜெய்லர் வெற்றிக்கு நெசமாவே இதான் காரணம்!

கொரோனாவுக்கு முன், பின் எனப் பிரிக்கும் அளவுக்கு தமிழ் சினிமாவின் வளர்ச்சி அதிகரிச்சு கொண்டே இருக்கிறது. மாபெரும் பிரச்னைக்கு பின்னர் திரையரங்குக்கு வந்த விக்ரம் படம் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்து இன்னும் திரையரங்குகள் இன்னும் உயிருடன் இருக்க காரணமாக அமைந்தது.

இதை தொடர்ந்து தற்போது வெளியாகி இருக்கும் ரஜினிகாந்தின் ஜெய்லர் படமும் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்து இருக்கிறது. கிட்டத்தட்ட வசூல் 800 கோடியை நெருங்கி இருப்பதாக தகவல்கள் வந்தவண்ணம் இருக்கிறது. இந்த வசூல் தகவல்கள் கூட சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து வரும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தான். கடந்த வார இறுதியில் 500 கோடியை நெருங்கி இருப்பதாக அறிவிப்பே விட்டனர்.

இதை தொடர்ந்து தற்போது ஜெய்லர் கண்டிப்பாக 1000 கோடியை தொடும் என எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள். ஆனாலும் ஒரு தரப்பினர் ரஜினிகாந்தால் படம் ஓடவில்லை. சன் பிக்சர்ஸ் தான் தங்களைடைய மீடியா மூலம் இப்படத்தினை ஓட வைப்பதாக கிசுகிசுக்க தொடங்கி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க- எல்லாம் கூடி வந்தும் கமல் கூட நடிக்க முடியாம போச்சி!.. புலம்பும் மன்சூர் அலிகான்….

இதுகுறித்து பிரபல திரை விமர்சகர் செய்யாறு பாலு கூறும்போது, எந்த ஒரு மீடியாவும் கதையே இல்லாத படத்தினை ஓடவே வைக்க முடியாது. எதுவும் நல்ல கதையாக இருந்தால் வசூலை கொஞ்சமாக அதிகப்படுத்த உதவ மட்டுமே முடியும்.

அப்படி பார்த்தால் சன் பிக்சர்ஸின் தயாரிப்பில் தான் ரஜினிகாந்தின் அண்ணாத்தே, விஜயின் பீஸ்ட் படங்கள் வெளியானது. அவர்கள் ஜெய்லரை ஓட வைப்பதாக எடுத்து கொண்டால் அதை முன்னவே இந்த ப்டங்களுக்கும் செய்திருக்க மாட்டார்களா? மீடியாவிற்கு அந்த பவர் எல்லாம் இல்லை.

மீடியா இந்த வருடம் தூக்கி விட்ட படங்கள் டாடா, லவ் டுடே, குட் நைட், போர் தொழில் படங்களை தான். அந்த படங்களில் எந்த ஸ்டார் வேல்யூக்களும் இல்லை. ஆனால் கதை இருந்தது. அப்படி இருக்கும் படங்களை யாருமே தூக்கி விட வேண்டாம். ரசிகர்களே கொண்டாடுவார்கள் எனத் தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க- கோபத்தில் விஜயகாந்த் என்னை எட்டி உதைச்சாரு!.. நாங்க போடாத சண்டையா?- கூலா சொன்ன மன்சூர் அலிகான்…

 

Related Articles

Next Story