அண்ணாத்த திரைப்படத்திற்கு பின் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கிய இப்படம் கடந்த 10ம் தேதி வெளியானது. இப்படத்தில் ரஜினியுடன் மோகன்லால், சிவ்ராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வினாயக், மிர்னா என பலரும் நடித்திருந்தனர்.
ரஜினியின் தர்பார் மற்றும் அண்ணாத்த படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. எனவே, ஜெயிலர் படத்தின் ரிசல்ட்டை ரஜினி மிகவும் நம்பியிருந்தார். அதேபோல் நெல்சனின் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் திரைப்படமும் சமூகவலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டது. எனவே, நெல்சனுக்கும் தான் யார் என நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.
இதையும் படிங்க: மிரட்டலாக எண்ட்ரி கொடுக்கும் ஹரால்ட் தாஸ்… லியோ படத்தில் அர்ஜூன் இவருக்கு தம்பியா?
ஒருபக்கம் சூப்பர்ஸ்டார் சர்ச்சையும் கிளம்பியது. இதனால், ஜெயிலர் பட ஆடியோ விழாவில் ரஜினி காக்கா – பருந்து கதையையும் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் விஜயைத்தான் சொல்கிறார் என பலரும் பேச சமூகவலைத்தளங்களில் ரஜினி ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் மோதிக்கொண்டனர்.
ஜெயிலர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை பெற்று வருகிறது. முதல்நாளே இப்படம் ரூ.90 கோடி வரை வசூல் செய்தது. தற்போது 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், தமிழகத்தில் ரூ.107 கோடியும், ஆந்திராவில் ரூ.39 கோடியும், கேரளாவில் ரூ.27.20 கோடியும், கர்நாடகாவில் ரூ.37.40 கோடியும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ரூ.7 கோடியும், வெளிநாடுகளில் ரூ.140 கோடி என மொத்தம் ரூ.357.60 கோடி வரை இப்படம் வசூல் செய்துள்ளதாக மூவி ட்ராக்கர்ஸ்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த தகவல்கள் மூவி டிராக்கர்ஸ்களால் சொல்லப்பட்டாலும் இதில் உண்மையான வசூல் என்ன என்பதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரிலீஸுக்கு முன்பே பல கோடி பிஸ்னஸ்!.. கெத்து காட்டும் தளபதி!.. ஜெயிலரை தாண்டும் லியோ?!…
நேற்று சோசியல்…
தனது தந்தை…
Sun serials:…
தமிழக வெற்றிக்கழகம்…
தமிழ் சினிமாவில்…