ஜெயிலர் படத்தின் 2 நாள் வசூல்!… விக்ரம் வசூலை தாண்டுமா?!. பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்!..

Published on: August 12, 2023
rajini kamal
---Advertisement---

பெரும் எதிர்பார்ப்பு மற்றும் பரபரப்புகளுக்கு இடையே வெளியாகியிருக்கும் திரைப்படம் ஜெயிலர். நெல்சன் இயக்கத்தில் ரஜினி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மலையாள நடிகர் வினாயகன், ஜாக்கி ஷெராப், மோகன்லால், ஷிவ் ராஜ்குமார், தமன்னா என பலரும் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் கடந்த 10ம் தேதி உலகமெங்கும் வெளியானது. நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. எனவே, தனது இருப்பை நிரூபிக்க வேண்டிய இடத்தில் ரஜினி இருந்தார். அதோடு ஒரு பக்கம் சூப்பர்ஸ்டார் பட்டமும் சர்ச்சையை ஏற்படுத்தி சமூகவலைத்தளங்களில் விவாதத்தை துவக்கி வைத்தது. எனவே, ஜெயிலர் படத்தின் ரிசல்ட் என்னவாகும் என்கிற எதிர்பார்ப்பு திரையுலகினரிடமும், ரசிகர்களிடமும் இருந்தது.

இதையும் படிங்க: கோபத்தில் ஜெயலலிதாவை அலறவிட்ட ரஜினி!.. நடுரோடு என்றும் பார்க்காத சூப்பர்ஸ்டார்!..

ஆனால், இப்படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்ததால் முன்பதிவு டிக்கெட்டே பல கோடிகளுக்கு விற்கப்பட்டது. வெளிநாடுகளிலும் முன்பதிவு பெரிய அளவில் இருந்தது. படம் வெளியானதும் இப்படத்திற்கு கலவையான விமர்சனம் அதனால் முதல் நாளே இப்படம் உலகம் முழுவதும் சேர்த்து கிட்டத்தட்ட ரூ.90 கோடி வரை வசூல் செய்ததாக செய்திகள் வெளியானது.

அதேபோல், படம் வெளியாகி 2 நாள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் ரூ.150 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் 3வது நாள் முடிவில் இப்படம் ரூ.200 கோடியை தாண்டும் எனவும் சொல்லப்படுகிறது. இப்படியே போனால் விக்ரம் பட வசூலை இப்படம் முந்திவிடுமா என்கிற எதிர்பார்ப்பையும் இப்படம் ஏற்படுத்தியுள்ளது.

சனி, ஞாயிறு மற்றும் 15ம் தேதி சுதந்திர தினம் என தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் ஜெயிலர் படம் மேலும் பல கோடிகளை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ச்ச.. இந்த படத்துல நடிச்சிருக்கவே கூடாது.. வேதனையில் ரம்யா கிருஷ்ணன்! இப்படி சொல்லிட்டீங்களே

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.