பிரச்சினையை ஊதி ஊதி பெருசாக்கி எப்படியோ ‘ஜெய்லர்’ படத்தை ஓட வச்சுட்டாங்க! அப்போ அதுதான் காரணமா?

rajini
ஜெய்லர் திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத ஒரு வெற்றியை பதிவு செய்து வருகிறது. படம் வெளியாகி 6 நாள்களில் 375 கோடியை நெருங்கிய ஜெய்லர் திரைப்படம் நேற்று வரை மீண்டும் கோடிக்கணக்கில் வசூல் செய்து வருகிறது. 11 நாளில் ஓவர்சீஸில் மட்டும் மறுபடியும் 25 கோடி வரை வசுலை அள்ளியிருக்கிறது.
மீண்டும் மீண்டும் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக வந்தவண்ணம் இருக்கின்றனர். இதனால் கண்டிப்பாக படம் 500 கோடியை தாண்டும் என சொல்லப்படுகிறது. அப்படி மட்டும் நடந்தால் தமிழ் சினிமாவில் 500 கோடியை தாண்டிய படங்களில் ஜெய்லர் திரைப்படம் முக்கிய இடம் வகிக்கும் என சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க : ”வருங்கால சூப்பர்ஸ்டார் நான் தான்” பகிரங்கமாக அறிவித்த அஜித்.. இது புது கதையால இருக்கு!
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான தனஞ்செயன் இந்தப் படத்திற்கான வெற்றிக்கான காரணத்தை கூறினார். அதாவது இதற்கு முக்கிய காரணமாக இருந்தது படம் வெளியாவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஊடகங்கள் செய்த அந்த ஒரு செயல் என்று கூறினார்.
அதாவது சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பற்றி மாறி மாறி ஊடகங்கள் பேசி வந்த நிலையில் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால் எப்படியாவது படத்தை ஜெயிக்க வைக்க வேண்டும் என ரசிகர்கள் முடிவெடுத்தனர்.
இதையும் படிங்க : அஜித்தின் மாஸ் படத்தை மிஸ் செய்த தளபதி… நானா? நீயா? போட்டி தொடங்கியது இப்படிதானா?
அதை செய்தும் காட்டினார்கள் , அதுமட்டுமில்லாமல் ரஜினியாகட்டும். கமலாகட்டும் அவர்களின் அந்த ஒரு மரியாதை, பட்டம் இவற்றை பற்றி கேள்வி கேட்டால் ரசிகர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று தனஞ்செயன் கூறினார்.
அதே போல் தான் இந்த ஜெய்லர் திரைப்படம் இவ்ளோ பெரிய இண்டஸ்டிரியல் ஹிட் ஆனதுக்கு காரணம் சூப்பர் ஸ்டார் பட்டத்தை பற்றி எழுந்த பிரச்சினைதான் என்று கூறினார். அதுவே படத்திற்கு ஒரு புரோமோஷன் போல ஆகிவிட்டது என்று கூறினார்.