அஜித், விஜய் செய்யும் அதே தவறை செய்யும் ரஜினி...பரபர ஜெயிலர் அப்டேட்...
தற்போதெல்லாம் விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்கர்களின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் தமிழகத்தில் நடைபெறுவதே இல்லை. பெரும்பாலும் அவர்கள் நடிக்கும் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில்தான் நடைபெறுகிறது.
அஜித் நடிப்பில் உருவான வேதாளம், விவேகம், விஸ்வாசம், வலிமை ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் அங்குதான் நடத்தப்பட்டது. ரஜினி நடிப்பில் உருவான அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் முழுக்க ராமோஜிராவ் பிலிம் சிட்டியில்தான் எடுக்கப்பட்டது.
இதனால், தமிழ் சினிமா தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதாக ஏற்கனவே புகார் எழுந்தது. ஆனாலும், இது தொடர்ந்து நடைபெற்றுதான் வருகிறது. இதில், விஜய் மட்டும் சில காட்சிகளை சென்னையில் எடுக்க சொல்கிறார். ஆனால், அஜித் சென்னையில் படப்பிடிப்பை வைத்துக்கொள்வதே இல்லை.
இந்நிலையில், நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில்தான் நடைபெறவுள்ளது. இப்படத்திற்காக அங்கு ஜெயில் போன்ற செட் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் ரஜினி அங்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக செல்லவிருக்கிறார். இது மீண்டும் தமிழ் சினிமா தொழிலாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.