மரணமாஸ் முத்துவேல் பாண்டியன்… தீயாக தெறிக்கும் ‘ஜெயிலர்’ டிரெய்லர் வீடியோ..

Published on: August 2, 2023
jailer
---Advertisement---

அண்ணாத்த படத்திற்கு பின் ரஜினி நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை டாக்டர், பீஸட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் இயக்கியுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் வெற்றியை ரஜினி எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

இப்படம் சிறப்பாக வந்திருப்பதாகவும், கண்டிப்பாக இப்படம் ரஜினிக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமையும் எனவும் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. ஜெயிலர் பட ஆடியோ விழாவில் ரஜினி முகத்தில் இருந்த மகிழ்ச்சிக்கும் அதுதான் காரணம் என சொல்லப்படுகிறது. இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

Also Read

jailer

குறிப்பாக காவாலா பாடலும், முத்துவேல் பாண்டியன் தீம் பாடலும் ரஜினி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. எனவே, இப்படத்திற்காக ரஜினி ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். ஏனெனில், நான்தான் எப்போதும் சூப்பர்ஸ்டார் என அவர் காட்டவிருக்கிறார். வருகிற 10ம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் டிரெய்லர் வீடியோவை படக்குழு இப்போது வெளியிட்டுள்ளது. இதில், அசத்தலான ஆக்‌ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த டிரெய்லர் வீடியோ ரஜினி ரசிகர்களை மிகவும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.