வாவ்!...கொல மாஸ் லுக்கில் தலைவர் ரஜினி....வெளியானது ஜெயிலர் அப்டேட்....

by சிவா |   ( Updated:2022-08-22 01:13:40  )
jailer
X

அண்ணாத்த திரைப்படத்திற்கு பின் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் புகைப்படத்தை வெளியிட்டு இன்று இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தி ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளார். கடந்த சில வருடங்களாகவே ரஜினியின் நடிப்பில் வெளியாகும்

திரைப்படங்கள் ஹிட் அடிப்பதில்லை. எனவே, இப்படத்தை எப்படியாவது ஹிட் படமாக்க வேண்டும் என ரஜினி நினைக்கிறார். அதேபோல், பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும், சமூகவலைத்தளங்களில் நெல்சனை நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர்.

எனவே, ரஜினி, நெல்சன் என இருவருக்கும் இப்படத்தின் வெற்றி மிகவும் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.

jailer

Next Story