ஜெயிலர் முத்துவேல் பாண்டியனின் குடும்பம் இதுதானாம்!.. தமன்னாவ காட்டி ஏமாத்திப்புட்டாய்ங்க!...

தர்பார் படத்தில் ரஜினிக்கு நயன்தாராவை ஜோடியாக போட்ட ஏ.ஆர். முருகதாஸ், வயதானவருக்கு மகள் வயசு பொண்ணு ஹீரோயினா கேட்குதா? என சர்ச்சை காட்சி வைத்து ரஜினிகாந்த் ரசிகர்களின் வயிற்றெரிச்சலை வாரிக் கட்டிக் கொண்டது தான் அந்த படம் தோல்வியடையவே காரணம் எனக் கூறினர்.

இந்நிலையில், ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு தமன்னா ஜோடி என ஃபர்ஸ்ட் சிங்கிளான காவாலா பாடலை காட்டி ஆசைக்காட்டிய நெல்சன் கடைசியில் இந்த படத்தில் ரஜினிக்கு தமன்னா ஜோடியில்லை ரம்யா கிருஷ்ணன் தான் ஜோடி என மொத்தமாக ஆசைக்காட்டி மோசம் பண்ணிவிட்டார்.

அதற்கு முழு சாட்சியாக தற்போது விக்னேஷ் சிவன் வரிகளில் உருவாகி உள்ள ரத்தமாரே பாடல் வெளியாகி ஜெயிலர் முத்துவேல் பாண்டியனின் மனைவி ரம்யா கிருஷ்ணன், மகன் வசந்த் ரவி அவருடைய மனைவி மற்றும் மகனாக ரித்து ராக்ஸ் நடித்துள்ளார் என்கிற மொத்த கதையையும் லிரிக் வீடியோ மூலம் காட்டி உள்ளனர்.

தமன்னாவும் கேமியோ தானா:

ஜெயிலர் படத்தின் ஷோகேஸ் எனப்படும் 2 நிமிட டிரெய்லரில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா உள்ளிட்ட யாரையுமே காட்டாத நிலையில், அவர்கள் அனைவருமே கேமியோ ரோலில் தான் நடிக்கின்றனர் என்பது தெளிவாகி உள்ளது.

ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு தமன்னா ஜோடி என இதுவரை நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு காவாலா பாடலில் மட்டுமே அவர் வந்து செல்வார் என்பது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.

முத்துவேல் பாண்டியன் குடும்பம்:

காவாலா, ஹுகும், ஜுஜுபி பாடல்களை தொடர்ந்து 4வது சிங்கிளாக ஜெயிலர் படத்தின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அனிருத் இசையில், விக்னேஷ் சிவன் வரிகளில் இடம்பெற்றுள்ள “ரத்தமாரே” பாடல் மனதை உருக வைக்கும் பாடலாக எந்தவொரு சர்ச்சையையும் கிளப்பாத பாடலாக உருவாகி இருப்பது மிகப்பெரிய ஆறுதலாக உள்ளது.

மேலும், இந்த பாடலில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகன் வசந்த் ரவி, மனைவி ரம்யா கிருஷ்ணன், பேரன் ரித்து ராக்ஸ் என குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடுவது, விஆர் மாலில் விளையாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்று ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

 

Related Articles

Next Story