Categories: Cinema News latest news

விக்ரம் படத்த மட்டுமில்ல இதையும் காப்பி அடிப்போம்… ஜெய்லர் படக்குழுவின் செம ப்ளான்!

தமிழ் சினிமாவிற்கு இது பொற்காலம் போல தொடர்ந்து படம் மிகப்பெரிய அளவில் வெற்றியாக அமைந்து ஹிட் வசூலை பெற்று தருகிறது. இதனால் பட தயாரிப்பாளர்களும், இயக்குனர்களுமே செம எனர்ஜி மோடில் இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

இயக்குனர் நெல்சன் தன்னுடைய பீஸ்ட் படத்தில் பெரிய அளவில் மன உளைச்சலில் இருந்த சமயம் தான் அவருக்கு ரஜினியுடன் பணியாற்ற வாய்ப்பு வந்தது. முதலில் ஜெய்லர் ஜெயிக்குமா என்ற சந்தேகமே பலரிடம் இருந்தது. ரஜினியும் அந்த நேரத்தில் அண்ணாத்த படம் மிகப்பெரிய தோல்வியை தழுவிய நிலையில் இருந்தார்.

இதையும் படிங்க: மறுபடியும் ஏமாற்றிய அஜித்!.. விடாமுயற்சிக்கு விடிவு காலம் இல்லையாம்!.. காண்டான ரசிகர்கள்!..

அத்தனை ஆசையை நிறைவேற்றும் விதமாக நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெய்லர் படம் மிகப்பெரிய வெற்றியினை பெற்று தந்தது. நேற்று படத்தின் தயாரிப்பு தரப்பான சன் பிக்சர்ஸே படத்தின் வசூல் 450 கோடியை தாண்டி விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டனர். இதை தொடர்ந்து கமலின் விக்ரம் பட வெற்றி நிகழ்வினை கொண்டாடும் விதமாக கறி விருந்து படக்குழுவிற்கு போடப்பட்டது.

இதையும் படிங்க: லோகேஷிடம் இது இருக்கவே இருக்காது… விஜயே சொன்ன சூப்பர் தகவல்… அட்ரா சக்க!

படக்குழு தரப்பில் இருந்து இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் விருந்தினை செய்தது மெஹந்தி சர்க்கஸ் மாதம்பட்டி ரங்கராஜனின் நிறுவனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

Published by
Akhilan