இன்று மாலை 6 மணிக்கு ஜெயிலர் படத்தின் ட்ரெயிலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு சிலர் இந்த ட்ரெயிலரை விக்ரம் படத்தோடு ஒப்பிட்டு கலாய்தும் வருகின்றனர். நெல்சன் இயக்கத்தில், ரஜினி, தமன்னா, சிவராஜ்குமார், மோகன்லால், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயிலர்.
இந்த படம் வருகிற 10ம் தேதி வெளியாகவுள்ளது. ஜெயிலர் படத்தின் பாடல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நெல்சன் இயக்கிய பீஸ்டு படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வந்தனர். இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ஜெயிலர் படத்தின் ட்ரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
ஆனால் விஜய் ரசிகர்கள் மற்றும் சிலர் இது விக்ரம் படத்தை போலவே இருக்கிறது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். 2 படத்தின் போட்டோவையும் போட்டு ஒப்பிட்டு மீம்ஸ் போட்டு வருகின்றனர். விக்ரம் படத்திலும் கமலஹாசனுக்கு ஒரு மகன், அவரின் மனைவி மற்றம் பேரன் இருப்பதை போலவே, இதிலும் ரஜினிக்கு ஒரு மகன், அவரின் மனைவி மற்றும் பேரன் இருப்பதையும் கம்பேர் செய்துள்ளனர்.
மேலும் விக்ரம் படத்தில் ஏஜென்ட் உப்பிலியப்பன் கதாபாத்திரத்தில் சந்தான பாரதி நடித்திருப்பார். அதே போன்ற ஒரு கதாப்பாத்திரத்தில் தான் விடிவி கணேஷ் நடிக்கிறார் என்றும் விக்ரம் படத்தில் ஒரு டாக்சி டிரைவராக இளங்கோ குமரவேல் நடித்த கேரக்டரில் யோகி பாபு நடிக்கிறார் என்றும் கூறி வருகின்றனர்.
இது உண்மையா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். ட்ரெயிலர் வெளியாகி சில நிமிடங்களில் இது விக்ரம் படம் போல் இருக்கிறது என்று கலாக்க தொடங்கியதால், ரஜினி ரசிகர்கள் கொந்தளிக்க தொடங்கிவிட்டனர். ஆனால் படம் வெளியானால் தான் படம் எப்படி இருக்கிறது என்பது தெரியவரும்.
இதையும் படிங்க- ரிலீஸுக்கு முன்பே விஜய் படத்தை காலி செய்த ஜெயிலர்… செம மாஸ் காட்டும் தலைவர்!..
சொர்க்கவாசல் படத்தின்…
Lokesh kanagaraj:…
தனுஷ் தயாரிச்ச…
மருத்துவராக இருந்தாலும்…
ஆர் ஜே…