அஜித்தை நம்பி மோசம் போன சிரஞ்சீவி!. சைக்கிள் கேப்பில் எஸ்கேப் ஆன ஜெயிலர்....

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். பீஸ்ட் படம் ட்ரோலை சந்தித்த நிலையிலும், அண்ணாத்த மற்றும் தர்பார் ஆகிய படங்கள் ரசிகர்களை கவராத நிலையிலும், ரஜினி, நெல்சன் என இருவருக்குமே ஒரு ஹிட் தேவை என்கிற நிலையில் இப்படம் வெளியானது.

அதோடு, ஒருபக்கம் விஜய்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் எனவும் திரையுலகில் சிலர் பேச துவங்க ரஜினிக்கு இது இமேஜ் பிரச்சனையாகவும் மாறிப்போனது. எனவேதான், ஜெயிலர் பட விழாவில் பருந்து - காக்கா கதையை அவர் சொல்ல வேண்டியிருந்தது. ஜெயிலர் படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என ரஜினி கணக்கு போட்டார்.

இதையும் படிங்க: ச்ச.. இந்த படத்துல நடிச்சிருக்கவே கூடாது.. வேதனையில் ரம்யா கிருஷ்ணன்! இப்படி சொல்லிட்டீங்களே

படம் வெளியானதும் சில விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் ஜெய்லர் படத்திற்கு எதிராக களம் இறங்கி படம் படு மோசம் என்கிற ரேஞ்சுக்கு பதிவிட்டு ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்தனர். ஆனால், உலகமெங்கும் உள்ள ரஜினி ரசிகர்கள் ஆர்வமுடன் இப்படத்தை பார்க்க விஜய் ரசிகர்களின் ஆசை நிராசையாகிப்போனது.

படம் வெளியான முதல் நாளே ரூ.90 கோடி வரை இப்படம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. 2ம் நாளில் ரூ.60 கோடி என மொத்தம் ரூ.150 கோடி வரை ஜெயிலர் வசூல் செய்துவிட்டது. அதேபோல், சனி, ஞாயிறு மற்றும் சுதந்திரன தின நாள் தொடர்ந்து அடுத்தடுத்து விடுமுறை வருவதால் இப்படம் மேலும் வசூலை குவிக்கும் என கணிக்கப்படுகிறது.

bolo shankar

தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் இப்படம் நல்ல வசூலை பெற்றது. அதேநேரம், 11ம் தேதி தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவான போலோ சங்கர் திரைப்படம் ஆந்திராவில் வெளியானது. தமிழில் ஹிட் அடித்த வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் இது.

எனவே, ஜெயிலர் படத்திற்கு வசூல் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போலோ சங்கர் திரைப்படம் ஆந்திராவில் தோல்வி அடைந்துவிட்டது. எனவே, ஆந்திராவில் ஜெயிலர் படத்திற்கு வசூல் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

இதையும் படிங்க: ஜெயிலர் படத்தின் 2 நாள் வசூல்!… விக்ரம் வசூலை தாண்டுமா?!. பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்!..

Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it