ஜெயிலர் 2 படத்தில் பாலையா ரோல் இதுதானா? அட காம்போ பட்டைய கிளப்புமே!

by Akhilan |
ஜெயிலர் 2 படத்தில் பாலையா ரோல் இதுதானா? அட காம்போ பட்டைய கிளப்புமே!
X

Jailer2: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர்2 படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல சூப்பர் ஹிட் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்க இருக்கும் நிலையில் அவருடைய கேரக்டர் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படத்தின் திரைக்கதையை விட படத்தின் கேரக்டர்கள் தான் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பலம் சேர்த்தது.

கன்னடத்தில் இருந்து சிவராஜ்குமார், மலையாளத்திலிருந்து மோகன்லால், ஹிந்தியில் இருந்து ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தனர். இவர்களுக்கு திரைகதையை பலமாக அமைத்து அவர்களின் காட்சிக்கு கூடுதல் மாஸ் விஷயங்கள இணைத்து படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றி இருந்தார் இயக்குனர் நெல்சன் திலீப் குமார்.

இதன் காரணமாகவே இப்படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கசிந்து வந்தது. அந்த நேரத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிமுக வீடியோவுடன் அறிவித்தது.

அது மட்டுமல்லாமல் முதல் பாகத்தைப் போல இந்த பாகத்திலும் பல பிரபல முகங்கள் இடம் பெற வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட சிவராஜ்குமார் தான் ஜெயிலர் இரண்டாம் பாகத்திலும் இருப்பதை உறுதி செய்தார்.

இந்நிலையில் பல நாட்களாகவே பாலகிருஷ்ணா படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்து வந்தது. தற்போது இத்தகவல் கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கும் நிலையில் இப்படத்திற்காக ஒரு வாரம் கால்ஷீட்டை ஒதுக்கி பாலகிருஷ்ணா தந்து இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

மேலும் ஜெயிலர் இரண்டாம் பாகம் ரஜினிகாந்தின் போலீஸ் கதையை அதிகம் சொல்லும் என ஏற்கனவே கூறப்பட்டது. அந்த வகையில் பாலகிருஷ்ணா இதில் ஒரு போலீஸ் வேடத்தில் நடிக்கலாம் என தகவல்கள் கசிந்துள்ளது. அதாவது முதல் பாகத்திலேயே பாலகிருஷ்ணாவுக்கு இப்படி ஒரு வேடத்தினை நெல்சன் ரெடி செய்து வைத்து இருந்தாராம்.

ஆனால் அப்போது மற்றவர்கள் கிடைத்த பக்கா மாஸ் காட்சிகள் பாலகிருஷ்ணாவுக்கு அமையாமல் போனதாம். அதனால் இந்த பாகத்தில் அதை நெல்சன் திலீப்குமார் பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

Next Story