Connect with us

சிவகார்த்திகேயனை காப்பி அடித்த சூப்பர் ஸ்டார்.? நெல்சனை வச்சி செய்து வரும் நெட்டிசன்கள்…

Cinema News

சிவகார்த்திகேயனை காப்பி அடித்த சூப்பர் ஸ்டார்.? நெல்சனை வச்சி செய்து வரும் நெட்டிசன்கள்…

சூப்பர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா இப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அதே போல் நெல்சன் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆதலால் இயக்குனர் நெல்சன் மற்றும் ரஜினிகாந்த் இருவருமே கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

சூப்பர் ஸ்டார் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில்உருவாகும் ஜெயிலர் திரைப்படம் அறிவித்து வெகு நாட்களாக கதை விவாதத்தில் இருந்தது. இந்த திரைப்படம் எப்போது ஆரம்பமாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்க,  இன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு  ஷூட்டிங் ஆரம்பித்து உள்ளதை படக்குழு உறுதி செய்துள்ளது.

இதையும் படியுங்களேன் – அந்த விஷயம் எனக்கு கண்டிப்பா வேணும்… அடம்பிடித்த தளபதி விஜய்… இதில் லோகேஷும் சிக்கிட்டாரே…!

jailer

இந்த போஸ்டரில் ரஜினிகாந்த் வயதான தோற்றத்தில் கம்பீரமாக நிற்கிறார். இதனை பார்த்ததும் சிவகார்த்திகேயனின், டாக்டர் பட போஸ்டர் போலவே, சிவகார்த்திகேயன் அணிந்திருந்த சட்டை, கண்ணாடி போலவும் ஜெயிலர் போஸ்டரில் ரஜினி அணிந்துள்ளார் என நெட்டிசன்கள் கிண்டலடித்துள்ள்ளனர். ஒருவேளை இது டாக்டர் படத்தின் அடுத்த பாகமா எனவும் கலாய்த்து வருகின்றனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top