முதல் படத்திற்கு முன்பே ஜெய்சங்கருக்கு வந்த அரிய வாய்ப்பு!.. ச்ச இத மிஸ் பண்ணிட்டாரே?..
சினிமாவில் நடிப்பதற்கு முன்னரே நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார் ஜெய்சங்கர். அவர் நடித்த நாடகங்களைப் பார்த்து ஜோசப் தளியத் தான் எடுத்த படத்தில் நடிக்க வைத்தார் ஜெய்சங்கரை. அது தான் ‘இரவும் பகலும்’ என்ற திரைப்படம். அது தான் ஜெய்சங்கர் நடித்த முதல் திரைப்படம்.
ஆனாலும் அவர் நடித்த முதல் படம் எம்ஜிஆர், சிவாஜி ஆகியோர் படங்களுடன் தீபாவளி நேரத்தில் ஒன்றாக ரிலீஸ் ஆனது. படம் மாபெரும் வெற்றி பெற்றது. சிவாஜி , எம்ஜிஆர் படங்களுடன் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றதால் அன்று முதல் ஜெய்சங்கர் ஒரு கவனிக்கப்பட வேண்டிய நடிகராக மாறினார்.
அதன் பின் தொட்டதெல்லாம் பொன் என்பதற்கேற்ப நடித்த படங்கள் எல்லாம் வெள்ளிவிழா படங்களாக மாறியது. வெள்ளி விழா நாயகன் என்றே அழைக்கப்பட்டார் ஜெய்சங்கர். கைவசம் ஏராளமான படங்கள் வைத்து வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில் ரிலீஸாக கூடிய வகையில் படு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார்.
டெல்லியில் கிடைத்த அரசு வேலையை உதறித் தள்ளி சினிமாவில் நடிக்க வந்தார். ஆனால் இவர் அறிமுகமான இரவும் பகலும் படத்திற்கு முன்பாகவே ஒரு அரிய வாய்ப்பு இவரை தேடி வந்திருக்கிறது. அந்த நேரத்தில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார் ஜெய்சங்கர். ‘என் தெய்வம்’ என்ற நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.
அந்த நாடகத்தை பி.என்.ரெட்டி என்பவர் பார்க்க வந்தார். பி.என்.ரெட்டி என்பவர் சினிமா உலகில் பிரபல தயாரிப்பாளராக இருந்தவரும் ஸ்டூடியோ அதிபருமான நாகி ரெட்டியின் சகோதரர் ஆவார். மேலும் உலகின் தலைசிறந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதை வென்றவர் பி.என்.ரெட்டி.
பல வெற்றிப் படங்களை சினிமா உலகிற்கு தந்திருக்கிறார். இவர் ஜெய்சங்கரின் நாடகத்தை பார்த்து மேடையில் ஜெயின் நடிப்பை பாராட்டி விட்டு தனியாக இருந்த ஜெய்யை அறையில் போய் பார்த்திருக்கிறார். அப்போது மேடையில் பாராட்டியவை அனைத்தும் உண்மை. மேலும் உங்களுக்கு சினிமாவில் பெரிய எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க : 90களிலேயே இன்டெர்நெட்டில் புகுந்து விளையாடி மிரள வைத்த பிரசாந்த்… அப்போவே அப்படி!!
தாங்கள் சம்மதித்தால் என்னுடைய படங்களிலேயே உங்களை நாயகனாக நடிக்க வைக்கிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் ஜெய் சங்கர் அப்போது என்ன மன நிலையில் இருந்தாரோ எனக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் இல்லை என கூறிவிட்டாராம். இல்லையென்றால் இரவும் பகலும் படத்திற்கு முன்பாகவே சினிமாவில் அறிமுகமாயிருப்பார் ஜெய்சங்கர்.