ஜெய்சங்கருக்கு மக்கள் வைத்த இன்னொரு பெயர்… இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!!

by Arun Prasad |
Jaishankar
X

Jaishankar

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் ஆகியோர் கோலோச்சிக்கொண்டிருந்த காலகட்டத்தில் தனது தனித்துவமான நடிப்பால் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை சேர்த்தவர் ஜெய்சங்கர். இவர் “இரவும் பகலும்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

கண்களால் பறிபோன வாய்ப்பு

சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த காலக்கட்டத்தில் இவரது கண்கள் சிறியதாக இருந்ததால் அதனை காரணமாக கூறி பல இயக்குனர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்து வந்திருக்கின்றனர். அந்த தருணத்தில் இயக்குனர் ஜோசப் தலியத் என்பவர் இவரது சிறிய கண்களுக்காகவே இவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். அவ்வாறு ஜெய்சங்கர் அறிமுகமான திரைப்படம்தான் “இரவும் பகலும்”. இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார் ஜெய்சங்கர்.

Cowboy ஜெய்சங்கர்

எனினும் ஜெய்சங்கர் என்ற பெயரை கேட்டாலே அவர் நடித்த Cowboy பாணியிலான திரைப்படங்களே பலருக்கும் ஞாபகம் வரும். அதுமட்டுமல்லாது தென்னகத்து ஜேம்ஸ் பாண்டு என்ற பெயரையும் பெற்றிருந்தார். இந்த நிலையில் ஜெய்சங்கருக்கு தென்னகத்து ஜேம்ஸ் பாண்டு என்ற பெயரை தவிர்த்து மற்றொரு பெயரும் இருக்கிறதாம்.

தென்னகத்து ஜேம்ஸ் பாண்டு

அதாவது ஜெய்சங்கர் ஒரு காலகட்டத்தில் மிக பிசியான நடிகராக வலம் வந்தாராம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜெய்சங்கர் நடித்த திரைப்படங்கள் வெளிவருமாம். ஆதலால் ஜெய்சங்கரை “வெள்ளிக்கிழமை நாயகன்” என்று பலரும் அழைப்பார்களாம். இவ்வாறு ஜெய்சங்கருக்கு “தென்னகத்து ஜேம்ஸ் பாண்டு” என்ற பெயரை தவிர “வெள்ளிக்கிழமை நாயகன்” என்ற பெயரும் இருந்திருக்கிறது.

இதையும் படிங்க: த்ரிஷாவுக்கும் எனக்கும் கல்யாணம்- திடீரென கிளம்பிய ஆன்மீக குரு… இவ்வளவு நாள் எங்கப்பா இருந்தீங்க?

Next Story