More
Categories: Cinema News Entertainment News latest news

அந்தம்மாவுக்கு ஆணவம் கொஞ்சம் அதிகம் – MGR மட்டும் இல்ல… அந்த நடிகருடனும் அப்படித்தான் இருந்தாங்க!”

தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகையாக ஜெயலலிதா 1965ம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான வெண்ணிற ஆடை என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி கணேசன் , எஸ். எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன், ரவிசந்திரன், சிவகுமார், ஏ. வி. எம். ராஜன், என். டி. ராமராவ், அக்கினேனி நாகேஸ்வர ராவ், தர்மேந்திரா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

 

Advertising
Advertising

இதுவரை ஜெயலலிதா 127 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவற்றுள் எம்.ஜி.ஆருடன் 28 படங்களில் இணைந்து நடித்தார். ஜெயலலிதாவின் அழகாலும், அறிவாலும் ஈர்க்கப்பட்ட எம்ஜிஆர் அவரை இரண்டாம் தரம் செய்துக்கொள்வதாக கூட உறுதிகொடுத்தாராம். ஆனால், அவர் முதல்வர் ஆனதால் பெயர் கெட்டுப்போய் விடும் என சில பெரிய தலைகள் எம்.ஜி.ஆருக்கு அறிவுரை கூற அவர் அந்த எண்ணத்தை கைவிட்டாராம். மேலும், ஜெயலலிதாவுடன் நடிப்பதையும் அவர் நிறுத்திவிட்டார்.

இதனால் கோபமடைந்த ஜெயலலிதா மற்ற நடிகர்களின் படங்களில் நடிக்க துவங்கினார்.  அதில் ஜெய்சங்கரும் ஒருவர். ஜெய்சங்கர் உடன் நெருக்கமாக நடித்து காதல் கிசுகிசுக்கப்பட்டார். இது எம்.ஜி ஆருக்கு தெரியவர ஜெய்சங்கருக்கு நேரடியாகவே மிரட்டல் விடுத்தாராம். ஆனால், அவர் கேட்பதாக இல்லை. இதனால் ஜெய்சங்கரின் மனைவிக்கு போன் செய்து உன் கணவர் உயிருடன் இருக்க வேண்டுமானால், ஜெயலலிதாவுடன் நடிப்பதை நிறுத்த சொல்’ என மிரட்டியிருக்கிறார்.

இதை அறிந்த ஜெ. எம்.ஜி.ஆரை பழிவாங்க ஜெய்சங்கருடன் மிக நெருக்கமாக நடித்துள்ளார். அந்த படங்களும் ஹிட் அடிக்க ஜெயலலிதாவுக்கு கொஞ்சம் ஆணவம் அதிகரித்தது. அதன் வெளிப்பாடாக என் பெயர் தான் படத்தின் டைட்டிலில் முதலில் இருக்கவேண்டும் அதன் பின்னர்தான் ஹீரோ பெயர் போடவேண்டும் என கன்டீஷன் போட்டாராம். ஒருகட்டத்திற்கு மேல் செம கடுப்பான இயக்குனர்கள் ஜெயலலிதாவின் பெயரையே போடாமல் படத்தை வெளியிட்டார்களாம்.

இந்த தகவலை அரசியல் விமர்சகர் டாக்டர். காந்தராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Published by
பிரஜன்

Recent Posts