“போனதும் கண்ணாலே, வந்ததும் கண்ணாலே”… ஜெய்ஷங்கர் வாழ்க்கையையே திருப்பி போட்ட கண்கள்…
தமிழின் பழம்பெரும் நடிகராக திகழ்ந்தவர் ஜெய்ஷங்கர், தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த முக்கிய நடிகர்களில் ஒருவராக ஜெய்ஷங்கர் திகழ்ந்தார். தொடக்கத்தில் அவர் சினிமாவில் நுழைய தடையாக இருந்தது அவரது கண்கள்தான். ஆனால் பின்னாளில் அவருக்கு வாய்ப்பு வந்ததற்கு காரணமும் அதே கண்கள்தான். இவ்வாறு ஜெய்ஷங்கர் வாழ்க்கையையே திருப்பி போட்ட அந்த இரு சம்பவங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
1962 ஆம் ஆண்டு பானுமதி, சௌகார் ஜானகி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “அன்னை”. இத்திரைப்படத்தின் உருவாக்கத்தின்போது ஒரு முக்கிய கதாப்பாத்திரத்திற்காக ஜெய்ஷங்கரை தேர்வு செய்திருந்தனர். ஆனால் ஜெய்ஷங்கரின் கண்கள் குட்டியாக இருந்த காரணத்தால் அவருக்கு அத்திரைப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு பறிபோனது.
இதனை தொடர்ந்து 1965 ஆம் ஆண்டு ஜோசப் தெலியத் என்பவர் உருவாக்கிய “இரவும் பகலும்” என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு ஜெய்ஷங்கருக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஜெய்ஷங்கருக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்துப் பார்த்த இயக்குனர் ஜோசப், அவரிடம் எதுவுமே கூறாமல் வீட்டிற்கு அனுப்பிவைத்துவிட்டார்.
ஆதலால் இத்திரைப்படத்திலும் தன்னை நிராகரித்துவிட்டார்கள் என்றே ஜெய்ஷங்கர் நினைத்தார். ஆனால் சிறிது நேரத்தில் ஜோசப் தெலியத் நிறுவனத்தில் இருந்து ஜெய்ஷங்கர் வீட்டிற்கு ஒரு கார் வந்தது. அதில் இருந்தவர் ஜெய்ஷங்கரை அழைத்து ஜோசப் தெலியத்திடம் மீண்டும் அழைத்துச் சென்றார்.
இதையும் படிங்க: “என்னைய குளோஸ் பண்ணிடாதீங்கப்பா!!” … ஆடியன்ஸை கையெடுத்து கும்பிட்ட லவ் டூடே இயக்குனர்…
அப்போது ஜோசப் தெலியத், ஜெய்ஷங்கரை பார்த்து “நீங்கள்தான் இந்த படத்தின் ஹீரோ” என்றார். ஜெய்ஷங்கருக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. மேலும் ஜோசப் தெலியத் “நமது படக்குவினருக்கு உங்களிடம் மிகவும் பிடித்திருந்தது உங்களது குட்டி கண்கள்தான். இது போன்ற சிறிய கண்கள், இப்போதுள்ள கதாநாயகர்கள் யாருக்கும் கிடையாது.
இவ்வளவு வித்தியாசமான கண்களை உடைய நடிகராக நீங்கள் இருப்பதினால்தான் உங்களை ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என படக்குழுவினர் விரும்பினார்கள்” என கூறினாராம். ஜெய்ஷங்கருக்கு முதலில் வாய்ப்பு கிடைக்காமல் போனது அவரது கண்களால்தான் என்றாலும், மீண்டும் அதே கண்களால்தான் வாய்ப்பு மீண்டும் தேடி வந்திருக்கிறது.