அறிமுகம் செய்தவர் கேட்ட உதவி!.. வாழ்நாள் முழுவதும் அதை செய்த ஜெய்சங்கர்.. மனுஷன் கிரேட்தான்..

jaishankar
திரையுலகில் மிகவும் கஷ்டப்பட்டு நுழைந்து ஒரு பெரிய இடத்திற்கு வரும் பல நடிகர்கள் வளர்ந்த பின் பழசையெல்லாம் மறந்துவிடுவார்கள். தன்னை வளர்த்துவிட்டவர்களுக்கோ, திரையுலகினருக்கோ அல்லது பொதுமக்களுக்கோ என யாருக்கும் எந்த உதவிகளையும் செய்யமாட்டார்கள். ஆனால், சிலர் அதில் விதிவிலக்காக இருப்பார்கள். தன்னை வளர்த்துவிட்டவர்களுக்கு பல வழிகளில் உதவி செய்வார்கள். அப்படி ஒருவர்தன் நடிகர் ஜெய்சங்கர்.

jai shankar
தனக்கு உதவியவர்களுக்கு மட்டுமல்ல. பலரையும் இயக்குனர்களாகவும், தயாரிப்பாளர்களாகவும் மாற்றியவர் ஜெய்சங்கர். குறிப்பாக பணமே இல்லாத பலரையும் கூட இவர் தயாரிப்பாளராக மாற்றியவர். அதாவது, ஒருவர் ஜெய்சங்கரை வைத்து படம் எடுக்க விரும்பினால் உடனே ஒரு ஃபைனான்சியரிடம் அழைத்து படம் எடுப்பதற்காக பணத்தை மட்டும் வாங்கி தருவார். சம்பளமாக ஒரு ரூபாய் கூட வாங்க மாட்டார். படம் முடிந்து வசூல் பெற்றபின் தனக்கான சம்பளத்தை வாங்கிக்கொள்வார். இப்படி பலருக்கும் உதவியவர் ஜெய்சங்கர்.
இவரை சினிமாவில் அறிமுகம் செய்தது ஜோசப் தலியாத் என்பவர்தான். இவர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக இருந்தவர். இவர் இயக்கிய ‘இரவும் பகலும்’ திரைப்படத்தில்தான் ஜெய்சங்கரை முதன் முதலில் அறிமுகம் செய்தார். இப்படம் 1965ம் ஆண்டு வெளியானது. இந்த படம் மட்டுமில்லாமல் வேறு சில படங்களையும் ஜோசப் தலியாத் இயக்கியுள்ளார்.

jai shankar
ஒருகட்டத்தில் அவர் கொஞ்சம் நலிந்து சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார். தன்னை சினிமாவில் அறிமுகம் செய்தவருக்கு உதவ வேண்டும் என முடிவெடுத்த ஜெய்சங்கர் அவரின் வீட்டிற்கு சென்று உங்களுக்கு என்னால் முடிந்த உதவி செய்ய விரும்புகிறேன் என கூறியுள்ளார். ஆனால், எனக்கு எந்த உதவியும் தேவையில்லை. நான் நன்றாகவே இருக்கிறேன். உனக்கு உதவ வேண்டுமெனில் என்னுடன் வா’ என ஓரிடத்திற்கு ஜெய்சங்கரை அழைத்து சென்றார்.
அவர் அழைத்து சென்ற இடம் ‘கருணை இல்லம்’ . அங்கிருந்த ஆதரவற்ற குழந்தைகளின் நிலையை கண்டு ஜெய்சங்கர் கலங்கிப்போனர். அன்று முதல் அவர் வாழ்வில் நடந்த எல்லா முக்கிய நிகழ்ச்சிகளையும் அந்த கருணை இல்லத்தில்தான் நடத்தினர் ஜெய்சங்கர். அந்த குழந்தைகளுக்கு தொடர்ந்து தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டே வந்தார். அதோடு, அவர் எங்கெல்லாம் படப்பிடிப்பு செல்கிறாரோ அங்கு எதாவது ‘கருணை இல்லம்’ இருக்கிறதா என விசாரித்து அங்கு சென்றும் உதவி வந்துள்ளார் ஜெய்சங்கர்.
எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் அவர்களுக்கு போட்டியாக பல ஹிட் படங்களை கொடுத்தவர் ஜெய் சங்கர். பல துப்பறியும் படங்களில் நடித்து தமிழக ஜேம்ஸ்பாண்ட் என்கிற பட்டத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எம்ஜிஆருக்கு போட்டியாக நின்ன நடிகை!.. வாள்சண்டை வித்தையில் தலைவரையே தூக்கி சாப்பிட்ட சம்பவம்!..