Categories: Cinema History latest news

எம்.ஜி.ஆர், சிவாஜியோடு ஒப்பிடும் போது இந்த நடிகர் எவ்ளவோ மேல்!..ஓப்பனாக பேசிய பழம்பெரும் நடிகை!..

தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் சேர, சோழ, பாண்டியர்களாக தமிழ் சினிமாவை ஆண்டவர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி, மற்றும் காதல் மன்னன் ஜெமினிகணேசன். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே இருந்தது.

வீரத்திற்கு எம்.ஜி.ஆர், நடிப்பிற்கு சிவாஜி, காதலுக்கு ஜெமினி என சினிமாவில் உள்ள அங்கங்களை ஆக்கிரமித்துக் கொண்டவர்கள் இவர்கள். ஆனால் இவர்களுக்கு மத்தியிலும் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தவர் நடிகர் ஜெய்சங்கர். இவரை தமிழ் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட் என்றே அழைப்பார்கள்.

பெரும்பாலும் சிஐடி கேரக்டரில் அமைந்த கதாபாத்திரத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்துபவர் ஜெய்சங்கர். இவரின் பெரும்பாலான படங்கள் சில்வர் ஜுப்ளி படங்களாக அமைந்துள்ளன. இவரை பற்றிய ஒரு செய்தியை பழம்பெரும் நடிகையான வெண்ணிறாடை நிர்மலா கூறியுள்ளார். வெண்ணிறாடை நிர்மலாவுக்கு சினிமாவில் கட்டுப்பாடுகள் விதித்தால் பிடிக்காதாம்.

எம்.ஜி.ஆர், சிவாஜி இவர்களுடன் சேர்ந்து நடிக்கும் போது படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் அவர்களுடன் சத்தம் போட்டு பேசக்கூடாது என்ற நிபந்தனைகளை விதித்திருப்பர். ஆனால் ஜெய்சங்கரிடம் அது இருக்கவே இருக்காது. மேலும் சகஜமாக பேசக்கூடியவர். இன்னும் சொல்லப்போனால் சூட்டிங்கில் நாங்கள் கவனிக்கவில்லை என்றாலும் ஆடை எதும் விலகி இருந்தால் அவரே பார்த்து இயக்குனரிடம் போய் அட்ஜெஸ்ட் பண்ண சொல் என்று சொல்லி அனுப்புவார் என்று ஜெய்சங்கரை பற்றி நிர்மலா கூறினார்.

Published by
Rohini